ஜூன் 10 ல் மக்கள் தொடர்பு முகாம்

தேனி, ஜூன் 8–உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரத்தில் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் ஜூன் 10ல் நடக்க உள்ளது.முகாம் காலை 10:00 மணி முதல் நடக்கிறது. இம்முகாமில் உத்தமபாளையம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள், பட்டா மாறுதல் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், விபத்து நிவாரணம், வேளாண்,போக்குவரத்து உள்ளிட்ட அரசு துறை தொடர்பான புகார்கள், கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement