கோழிக்கோட்டில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; தொற்று அறிகுறிகளுடன் 3 பேருக்கு சிகிச்சை
கோழிக்கோடு: கேரளாவில் நிபா தொற்று அறிகுறிகளுடன் 3 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வுக்காக கேரளா விரைகின்றனர்.
கேரளாவில் 2018ம் ஆண்டு கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று முதன்முதலாக கண்டறியப்பட்டது. தற்போது கோழிக்கோட்டில் ஒருவர் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை மருத்துவக் குழுவினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந் நிலையில் கேரளாவில் மேலும் 3 பேர் நிபா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 3 பேரையும் தனிமைப்படுத்தி உள்ள சுகாதாரத் துறையினர் அவர்களின் உயிரியல் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
ஆய்வக பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர். நிபா வைரஸ் தொற்றின் தற்போதை நிலையை மதிப்பீடு செய்யவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்கப்படும சுகாதார நெறிமுறைகளை ஆய்வு செய்யவும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு விரைந்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் தற்போது 87 பேர் உள்ளனர். நிபா தொற்று பதிவான ராமனாட்டுகரா நகராட்சியின் 5ம் வார்டு பகுதியில் உள்ள 286 வீடுகளையும் அதிகாரிகள் கண்காணித்து, காய்ச்சலுடன் இருக்கும் 12 பேரை அடையாளம் கண்டுள்ளனர். பரிசோதனையில் அவர்கள் யாருக்கும் நிபா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
-
'குவாரிகளில் விரைவில் ஆய்வு'