அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
நாமக்கல்; 'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' என்ற புதிய திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்-குடியின தொழில் முனைவோரின், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், எண்-ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். உணவு பதப்ப-டுத்தல், தென்னை நார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தயாரித்தல், ரைஸ் மில், ஸ்பின்னிங் மில், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்-பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், வாடகை கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்-களின் விரிவாக்கத்திற்கும் மானியம் வழங்கப்-படும்.
மானியம் மொத்தம் திட்ட மதிப்பீட்டில், 35 சத-வீதம் ஆகும். மானிய உச்ச வரம்பு உற்பத்தி தொழிலுக்கு, ஒரு கோடி ரூபாய். சேவை தொழி-லுக்கு, 75 லட்சம் ரூபாய் மற்றும் வியாபார தொழிலுக்கு, 50 லட்சம் ரூபாய். மேலும், கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் (10 ஆண்-டுகளுக்கு மிகாமல்) 6 சதவீதம் வட்டி மானி-யமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்க-ளுக்கும், 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த எந்த தனிநபரும் மற்றும் பங்குதாரர், கூட்-டாண்மை, தனியார் நிறுவனங்களும், இத்திட்-டத்தின் கீழ் பயன் பெறலாம்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வி தகுதி ஏது-மில்லை. வயது வரம்பு, 18 முதல், 55க்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்-டுமே இத்திட்டத்தில் கடனுதவி பெறமுடியும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்து பயன் பெற விரும்பும் பயனாளிகள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவ-ரியில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்த விபரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற, 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் வளாகம், நாமக்கல்-637003' என்ற முக-வரியில் நேரடியாகவோ அல்லது 04286-281151 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும்
-
ரூ.134 கோடி சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு; இபிஎஸ் விமர்சனம்
-
மும்பையில் ரூ.11 கோடி கஞ்சா கடத்தல்; 'மிஸஸ் கேரளா' போட்டியாளர் கைது
-
போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது; சொல்கிறார் உதயநிதி
-
பட்டா மாறுதலுக்கு மனு வழங்கினால் 15 நாளில் நடவடிக்கை; செங்கோட்டையன் அறிவிப்பு
-
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
-
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜ அரசு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்