செஸ்: அர்ஜுன் வெற்றி
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தான் செஸ் இரண்டாவது சுற்றில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மூன்றாவது 'உஸ்செஸ்' கோப்பை தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
நேற்று தனது இரண்டாவது சுற்றில் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் விதித், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சியிடம் தோல்வியடைந்தார். இரண்டு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் மடமினோவ் (2.0) முதலிடத்தில் உள்ளார். நாடிர்பெக் (1.5), அர்ஜுன் (1.5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரக்குவேன் மோதி தொழிலாளி காயம்
-
தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி ஒண்டி முனியப்பன் நகர் மக்கள் மனு
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
-
செவிலியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
-
யாத்திரை சென்றவர் மாயம்: மகள் புகார்
-
ராசிபுரத்தில் மாற்றியமைக்கப்பட்ட பஸ் வழித்தடத்தில் எஸ்.பி., ஆய்வு
Advertisement
Advertisement