இந்திய ஜோடி சாம்பியன் * சாலஞ்சர் கோப்பை டென்னிசில்

டைலர்: சாலஞ்சர் கோப்பை டென்னிசில் இந்தியாவின் ராம்குமார், ரித்விக் ஜோடி சாம்பியன் ஆனது.
அமெரிக்காவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ரித்விக் ஜோடி, சீனாவின் பஜின் சன், ஜப்பானின் வடனபே ஜோடியை 6-3, 6-2 என வீழ்த்தியது.
அடுத்து நடந்த பைனலில் இந்திய ஜோடி, அமெரிக்காவின் ஜசாரி பக்ஸ், வாலி தாய்னே ஜோடியை சந்தித்தது.
முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை இந்திய ஜோடி 7-6 என கைப்பற்றியது.
'டை பிரேக்கர்' வரை நீண்ட அடுத்த செட்டையும் இந்திய ஜோடி 7-6 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 39 நிமிடம் நடந்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Advertisement