பட்டா மாறுதலுக்கு மனு வழங்கினால் 15 நாளில் நடவடிக்கை; செங்கோட்டையன் அறிவிப்பு
சென்னை: பட்டாக்களுக்கு மனு வழங்கினால் 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பட்டா மாறுதல் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார். பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: பட்டாக்கள் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது என்பதை தவிர்க்கும் வகையில் விரைந்து வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது.
அதற்கான நடவடிக்கை விரைந்து செய்வதற்காக துறையின் சார்பாக பல்வேறு ஆலோசனை நடைபெற்று இருக்கிறது. துறையின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து பேசிய பிறகு அந்த பணிகளை நாம் விரைந்து மேற்கொள்ள இருக்கிறோம். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்யப்பட்டு 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
வாசகர் கருத்து (24)
Ramesh Kannanin Samoogaparvai - ,இந்தியா
13 ஜூன்,2026 - 09:34 Report Abuse
ஏற்கனவே இருக்கக்கூடிய சரியாக இருக்கக்கூடிய பட்டாவில் கூட இவர்கள் ஆன்லைனில் ஏற்றும்பொழுது பலவிதமான தவறுகளை செய்கிறார்கள் நில அளவில் தவறு செய்கிறார்கள் பெயர் மாற்றி போட்டு விடுகிறார்கள் இதுபோன்ற அதிகாரிகள் மாத சம்பளம் வாங்குவது இதற்கு தானே இதை சரியா செய்யாமல் ஏனோ தானோ என்று அவர்களுடைய மெத்தனப் போக்கினால் செய்கின்ற தவறுகள் எல்லாம் பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்திற்கும் மீடியேட்டர் களுக்கு இடமும் சென்று பணம் மற்றும் நேரம் மன உளைச்சல் எல்லாத்துக்கும் ஆளாகுகிறார்கள் இது போன்ற அதிகாரிகள் செய்யும் தவறுக்கு 15 நாள் கொடுக்கக் கூடாது 24 மணி நேரத்திற்குள் தவறை அவர்கள் சரி பண்ணி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை போட்டால்தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் 0
0
Reply
M.I.NAGOOR MEERAN - PALLADAM,இந்தியா
13 ஜூன்,2026 - 06:06 Report Abuse
15 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்ற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது அமைச்சர் செங்கோட்டையனுக்கு தெரியாதா? 0
0
Ramesh Kannanin Samoogaparvai - ,இந்தியா
13 ஜூன்,2026 - 09:32Report Abuse
பட்டா வழங்குதலில் சர்வேயர் தவறாக பதிவு செய்து விட்டாலோ துறை ரீதியான தவறுகள் ஏற்பட்டால் கூட பொதுமக்கள் அவர்கள் அமைதி குலைந்து பல இன்னல்களுக்கு ஆளாகி 10 15 முறை அலைந்து திரிந்து புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து இவர்கள் செய்கின்ற தவறை திருத்துவதற்கு மிக மன உளைச்சல் ஆளாகுகிறார்கள் அதிகாரிகள் சம்பளம் பெற்றுக் கொண்டு ஏன் இது போன்ற தவறுகளை செய்கிறார்கள் பட்டா சொந்தக்காரர் உடைய பேருக்கு பதில் வேற ஒருத்தர் பெயரை போடுவது சர்வே நம்பர் தப்பா போடுவது அளவு தப்பா போடுவது இதற்கெல்லாம் பொதுமக்கள் தான் அவதிப்படுகிறார்கள் அவர்களுடைய நேரமும் நிம்மதியும் பணவிரயமும் ஆகிறது இவற்றை மாற்றி அதிகாரிகள் செய்யும் தவறுக்கு அவரே பொறுப்பேற்று 24 மணி நேரத்திற்குள் அதை சரி செய்து தர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் 0
0
Reply
LAKSHMANA PERUMAL - ,இந்தியா
12 ஜூன்,2026 - 21:35 Report Abuse
பட்டா ,அடங்கல் மற்றும் சிட்டா எதுவும் காசுஇல்லாமல் தருவதில்லை. வருவாய் துறையில் வருவாய் இல்லாமல் வேலை நடைபெறாது எலாம் கண்துடைப்பு . 0
0
Reply
r.thiyagarajan - sharjah,இந்தியா
12 ஜூன்,2026 - 19:22 Report Abuse
I want to upload my patta to computer asking money..this situation must need to be change 0
0
Reply
GMM - KA,இந்தியா
12 ஜூன்,2026 - 18:34 Report Abuse
பட்டா மாறுதல் முன், இடத்தை நில அளவு செய்து பரப்பை, எல்லையை உறுதி செய்ய வேண்டும். முதலில் தமிழகம் முழுவதும் நில அளவை பதிவேடு இருக்க வேண்டும். பதிவு இருந்தால், அதன் நகல் தான் பட்டா?. சில நாட்களில் பட்டா வழங்க முடியும். ஒரு பட்டா வழங்க அனைத்து ஆவணங்கள் இருந்தால், நிரந்தர பட்டா. பிற ஆவணங்கள் மூலம் வழங்கும் பட்டா தாசில்தார் உடன் இணைத்து வழங்க வேண்டும். மாநில வருவாய் துறை அறியாமல் பிற மோசடிகள் செய்ய முடியாது. பட்டா வரலாறு 1947 முதல் சேகரிக்க முடியும். 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
12 ஜூன்,2026 - 18:00 Report Abuse
பட்டா மாறுதலுக்கு, ச.அடி 1க்கு அல்லது சென்ட் 1 க்கு அல்லது நஞ்சை/ புஞ்சை ஏக்கர் 1க்கு எவ்வளவு கையூட்டு என்பதை இனம் வாரியாக நிர்ணயம் செய்து, ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஒரு அறிவிப்பு வைத்து விட்டால், பட்டா கேட்டு மனுச் செய்வோர் மிகக் குறைந்த நாட்களிலேயே பட்டா பெற முடியும் பட்டா கேட்டு மனுச் செய்வோருக்கு இதனால் தொல்லைகள், துயரங்கள் ஒருபோதும் இருக்காது 0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 17:56 Report Abuse
எப்படியும்,, "தள்ளு படி " ? 0
0
Reply
K.Ramachandran - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 17:07 Report Abuse
Standard response in previous government time in all these offices was - Net velai sayalinga.
That means, you have to do the needful - otherwise, the net will never work.
Hopefully, this government ensures that Net works always in these government offices. 0
0
Reply
Sankar Vedhachalam - Chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 16:58 Report Abuse
வருவாய் துறையில் லஞ்சம் வாங்காமல் பட்டா மாறுதல் செய்து தருவது கனவிலும் நடக்காத ஒன்று.ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது. 0
0
Reply
Sun - ,
12 ஜூன்,2026 - 16:54 Report Abuse
பட்டா மாறுதலுக்கு ஆன் லைன் அப்ளிகேசன் காலக்கெடு எல்லாமே ஏற்கெனவே நடைமுறையில் உள்ளவைதான். சீனியரான வருவாய் துறை அமைச்சரே இதில் ஏதோ புதிய நடைமுறையை இப்போதுதான் புகுத்துவது மாதிரி பில்டப் கொடுக்கலாமா? 0
0
KRISHNAN R - chennai,இந்தியா
13 ஜூன்,2026 - 10:29Report Abuse
இவர்கள்,, டெங்கு வின், இன்னொரு, பில்டர் காபி தான் 0
0
Reply
மேலும் 12 கருத்துக்கள்...
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement