மோட்டார் மூலம் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு

வேடசந்துார், ஜூன் 10

தட்டாரப்பட்டி குழந்தைபட்டி பகுதி மக்களுக்கு பாறையூர் அருகே போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் நடக்கிறது. மேடான பகுதி என்பதாலும் சிலர் மோட்டார் பயன்படுத்தி திருடுவதாலும் இப்பகுதிக்கு குடிநீர் சீராக செல்லவில்லை. இரு வாரமாக போதிய குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் கூறுகையில், ‘‘மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதை கண்டறிந்து தடுத்து நிறுத்தினோம். அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தோம். குடிநீர் சீராக வெளியேறும் வகையில் பைப்லைன் சரிபார்க்கப்பட்டது. ஊர் அருகே பயன்பாடு இன்றி இருந்த 10 ஆயிரம் லிட்டர் தொட்டியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம். தற்போது குடிநீர் பிரச்னை இல்லை ’’ என்றார்.

Advertisement