தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
நமது நிருபர்
சட்டசபையில் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா பேசுகையில் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் விஜய்க்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது: உங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
சட்டசபையில் எம்எல்ஏ.,க்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கின்றனர். அதனால் அந்த ஊழியர்களுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதற்கு பதிலாக பாட்டிலில் தண்ணீர் வைத்து விட்டால் சுலபமாக இருக்கும். கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வைத்து விடலாம் என்பது எனது கருத்து, என்றார்.
வேண்டாம்...!
அப்பொழுது எழுந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ''அப்படி தண்ணீர் பாட்டில்களை கொடுத்தால் வீசி எறிய வாய்ப்புள்ளது; அப்படி தர வேண்டாம்'' என்றார். ஓபிஎஸ் கூறியது அவருடைய தனிப்பட்ட அனுபவமா என்று அறிய விரும்புகிறேன் என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கூறினார்.
சிரிப்பலை
இதனால் சபையில் சிரிப்பலை ஏற்பட்டது. (ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தபோது, பொதுக்குழு களேபரத்தில் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதை தங்கம் தென்னரசு மறைமுகமாக குறிப்பிட்டார்)
தூக்கி எறிய வேண்டும் என முடிவெடுத்து விட்டால் டம்ளரை கூட தூக்கி அடிப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது இன்னும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
வாசகர் கருத்து (22)
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
22 ஜூன்,2026 - 21:45 Report Abuse
ஆகக்கூடி குரங்குப் பயல்கள் முச்சூடும் கோட்டையில் குடியிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்... 0
0
Reply
sankar - trichy,இந்தியா
22 ஜூன்,2026 - 21:21 Report Abuse
தூக்கி எரியும் என்று முடிவு எடுத்தால் எதையும் வீசுவார்கள் ஆனால் வீசினால் ஒரு வருடம் அவைக்கு வர முடியாது என்றால் வீசுவதை நினைத்து கூட பார்க்கமாட்டார்கள் 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
22 ஜூன்,2026 - 18:55 Report Abuse
பாட்டிலை தூக்கி எறிவது டம்பளரை தூக்கியெறிவது சேலையை பிடித்து இழுப்பது இவைகேளெல்லாமே ஒரு சட்ட சபை நபர்களின் நாகரிகமான ஒரு சர்ச்சையா வேறு வேலையே இல்லையா என்னடா இது? இதற்காகவா இவர்கள் தேர்தெடுக்கப்பட்டு சட்ட சபை செல்ல வேண்டும்? நேரத்தை வீணாக்குகிறார்கள் 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
22 ஜூன்,2026 - 18:38 Report Abuse
தேவையற்ற பேச்சுக்ககளை பேசி சட்டசபை நேரம் வீணடிக்கப்படுகிறது. 0
0
Santhakumar Srinivasalu - ,
22 ஜூன்,2026 - 20:06Report Abuse
சபை உறுப்பினர்கள் மக்களுக்கு தேவையானதை பேசினால் ரொம்ப நல்லது 0
0
Reply
VSMani - ,இந்தியா
22 ஜூன்,2026 - 16:56 Report Abuse
சட்ட சபையில் ஒழுங்கீனமாக தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிவது மைக்கை உடைத்து எறிவது அடிக்க கை ஓங்குவது போன்ற செயல்களை செய்பவர்களை உடனடியாக MLA பதவியிலிருந்து டிஸ்மிஸ் பண்ணவேண்டும். ஒழுங்கீனமானவர்கள் சட்டசபையில் இருப்பதற்கு தகுதியற்றவர்கள். 0
0
Reply
Jayamkondan - Chennai,இந்தியா
22 ஜூன்,2026 - 16:45 Report Abuse
அசெம்பிளிக்கு போய் எதாவது ஆக்கபூர்வமா பேசுவேன்னு பார்த்தா நீயும் திமுக காரன் மாறியே டைம் பாஸ்க்குத்தான் போற போல இருக்கு, பாயிண்டே இல்லாம பல மணி நேரம் பேசுவ. கேட்டா துண்டு பேப்பரே இல்லாம பேசுவேன்னு பீத்திக்கிறது . இருக்குறது ஒரே ஒரு உறுப்பினர் அதையும் கெடுத்து விடாத. தேமுதிகவில் நிறைய படிச்சவங்க இருக்காங்க அவங்களுக்கு வழி விடுங்க. 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
22 ஜூன்,2026 - 15:48 Report Abuse
மக்களே பிரச்னையை துணிவோடு சபையில் எடுத்துரைத்த அண்ணியாருக்கு நன்றி. அடுத்த முக்கிய பிரச்னை , சளி இருமல் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு வெந்நீர் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வையுங்கள். 0
0
Reply
Vasan - ,இந்தியா
22 ஜூன்,2026 - 15:10 Report Abuse
இது போன்ற ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நிறைய தொடர வேண்டும். மேலும், அவற்றை, நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும். 0
0
Reply
Govi - ,
22 ஜூன்,2026 - 14:47 Report Abuse
மாணங் கெட்ட பிற விops முடிந்தல் : பதிவு வேற்றுக
அச்சுருத்தல் வரும் என்றால்
வேண்டாம்: நான் : திண மலர் : ரசிகன் : வயது :73 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
22 ஜூன்,2026 - 13:53 Report Abuse
ஓரிரு மாதங்களுக்கு முன் மேடையிலிருந்த ஒருவர்தான் கூட்டத்திலிருந்த ஒரு பகுதியினரை நோக்கி தண்ணீர் பாட்டில் வீசியதாக படித்த ஞாபகம் இருக்கிறது. இப்போ சிரிக்கணுமா அழுவனுமா ? 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
புதுச்சேரி கிராம வாங்கி சர்வதேச யோகா தினம்
-
புதுச்சேரியில் தேசிய பாரம்பரிய நடன விழா பாரம்பரிய கலைகள் சங்கமத்தால் உற்சாகம்
-
வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்
-
இலவச மனைப்பட்டா கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரதம்
-
நெய்வேலி வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படுமா?: 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்பார்ப்பு
-
சத்துணவு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement