சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

9

சென்னை: சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜூன் 22) கூடியது. திருவள்ளூரில் அம்மோனியா வாயுக்கசிவு விவிகாரம் குறித்து 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் சட்டசபையில் விளக்கம் அளித்தார். அமைச்சர் விளக்கத்துக்கு முன் தங்களை பேச அனுமதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மேகதாது விவகாரத்தில் சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் பேச அனுமதி மறுத்த சபாநாயகரை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.


வெளிநடப்பு செய்யாதவர்கள்

சட்டசபையில் இன்று இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எனினும், எம்எல்ஏ.,க்களில் கீழ்க்கண்ட 4 பேர் வெளிநடப்பு செய்யவில்லை.


1.வேலுமணி தொண்டாமுத்துார்

2.விஸ்வநாதன் நத்தம்

3.ராகேஷ் சங்கராபுரம்

4.ரவி மனோகரன், பழநி

சபாநாயகர் கண்டிப்பு



உரிமை பிரச்னை தொடர்பாக விளக்கம் அளித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:
எப்போது அனுமதி தர வேண்டும் என்று எனக்குத் தெரியும். சட்டசபை நடவடிக்கை தற்போது நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது, எனவே எச்சரிக்கை உடன் பேச வேண்டும்.

சட்டசபை மாண்பை காக்க வேண்டும்; வரலாற்று சிறப்பு மிக்க சபையில் கண்ணியக்குறைவாக ஈடுபடக்கூடாது, அப்படி ஈடுபட்டால் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், வெள்ளிக்கிழமை, சைகை போன்ற விரும்பத்தகாத செயல் சபையில் நடந்தது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு சபாநாயகர் பிரபாகர் கண்டிப்புடன் தெரிவித்தார்.

அமைச்சர் விளக்கம்



அமைச்சர் ஆனந்த் பேசியதாவது: மேகதாது விவகாரத்தில் விவசாயிகளின் உரிமையில் தமிழக அரசு எவ்வித சமரசமும் செய்யாது. மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, என்றார்.

வாழ்த்து



சட்டசபையில் முதல்வர் விஜய்க்கு சபாநாயகர் பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர், ''திரைத்துறை, அரசியல் என இரண்டிலும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் முதல்வர் விஜய்'' என்று பாராட்டினார்.



@block_Y@

வாழ்த்துக்கள்!

திமுக கொறடா எ.வ.வேலு கூறியதாவது:அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக விவசாயிகளின் பிரச்சனை என்பதால் இதில் அரசியல் செய்யக்கூடாது; மேகதாது விவகாரத்தில் திமுக கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்க்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம். முதலமைச்சர் விஜய்க்கு திமுக உறுப்பினர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். இவ்வாறு எவ வேலு கூறினார். block_Y


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சட்டசபை இன்றைய கூட்டத்தொடர்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement