விளைநிலம் காப்போம் முகாம்   

சிவகங்கை, ஜூன் 10-கிராம ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு விளைநிலம் காப்போம் இயக்க முகாம் ஜூன் 30 வரை நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் இயற்கை விவசாயம், மண் ஆரோக்கியம், நுண்ணுாட்ட மேலாண்மை, சமச்சீர் உர பயன்பாடு, பசுந்தாள் உரம், இயற்கை உர பயன்பாடு ஊக்குவித்தல், ஆரோக்கிய உணவு பழக்கத்தை ஊக்குவித்தல் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படும். இந்த முகாமில் அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்றார். ///

 

Advertisement