வரத்து குறைவால் செவ்வந்திபூ விலை உயர்வு
கோவை: மூகூர்த்த நாட்கள் இல்லாததால் மல்லி, முல்லை, அரளி உள்ளிட்ட உதிரிப்பூக்கள் விலை குறைந்துள்ளது. வழக்கமாக குறைந்த விலையில் விற்பனையாகும் செவந்திபூ விளைச்சல் குறைவால் கிலோ, ரூ.300 க்கு விற்பனையாகிறது.
வியாபாரி அபுதாகிர் கூறுகையில், ‘‘சித்திரை, வைகாசியில் முகூர்த்தம் மற்றும் கோயில் விழாக்களால், பூ விலையில் ஏற்றம் இருந்தது. ஆனி மாதத்தில் பூக்கள் விலை உயராது. கோயில் விழாக்களால் ஆடி மாதத்தில் விலை கூடும். தற்போது செவ்வந்தி தான் விலை அதிகம். அடுத்த இரு மாதங்களுக்கு செவ்வந்திபூ வரத்து மிகவும் குறைவாக இருக்கும். விவசாயிகள் ஆயுத பூஜை விற்பனைக்காக, வைகாசி மாதத்தில் நடவு செய்வர். அதனால் ஊடு பயிரில் இருந்து எடுக்கப்படும் செவ்வந்திதான் இப்போது விற்பனைக்கு வருகிறது. அதினால் விலை அதிகம்’’ என்றார்.நேற்று மல்லி ஒரு கிலோ, ரூ.480, ஜாதி மல்லி, ரூ.400, முல்லை, ரூ.200, அரளி ரூ.120 க்கு விற்பனையானது.
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?