கணக்கெடுப்பில் விவரங்கள் துல்லியமாக பதிவு செய்ய அறிவுரை
கோவை: கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கள பயிற்சியாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சியில், பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் புள்ளியியல் துறையைச் சேர்ந்த 70 பேர் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக, வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கணக்கெடுப்பு ஆக., 1 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. மக்கள் தங்களது விவரங்களை மொபைல் செயலி வாயிலாகத் தாங்களே பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சியில் டிஜிட்டல் தளத்தில் விவரங்களைப் பதிவேற்றுவது குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, உஜ்வாலா யோஜனா, ஸ்வச் பாரத் உள்ளிட்ட திட்டங்கள், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. எனவே, வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கணக்கெடுப்பில் மின் இணைப்பு, குடிநீர் வசதி, அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட குடியிருப்பின் நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?