பருவமழையின் போது தடையற்ற மின் வினியோகம்: அவசர கால பணிக்கு உபகரணங்கள் தயார்

ஊட்டி: தென்மேற்கு பருவமழையின் போது தடையற்ற மின் வினியோகத்தை உறுதி செய்ய ஏதுவாக அவசர கால பழுது பார்ப்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பையும் தடையற்ற மின் வினியோகத்தையும் உறுதி செய்யும் வகையில், மின்வாரியம்பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

வீடுகளில் மின்சார தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெற, 30 மில்லி ஆம்பியர் திறன் கொண்ட ஆர்.சி.டி., கருவிகள் பொருத்த வேண்டும். அறுந்து கிடக்கும் மின்கம்பிகள், சாய்ந்த மின் கம்பங்கள் மற்றும் ஸ்டே வயர்கள் போன்றவற்றை தொடகூடாது.

தற்போது, அவசர கால பழுது பார்ப்பு பணிகளுக்கு தேவையான மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின்கம்பிகள் மற்றும் இதர அவசர கால உபகரணங்கள் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கள பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மின் வினியோக தடை ஏற்பட்டால் உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பிரிவு, உட்கோட்டம் மற்றும் கோட்ட அளவிலான அவசர கால குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

@block_B@

அவசர உதவிக்கு...

மின் வினியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் அழைப்பு மையத்தின், 9498794987 என்ற எண்ணில் பதிவு செய்யலாம். புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார அவசர நிலை அல்லது அபாயங்கள் ஏற்பட்டாலும் தொடர்பு கொள்ளலாம்.block_B

Advertisement