கஞ்சா பதுக்கியவர் கைது:  1.200 கிலோ பறிமுதல்

ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் போலீசார், பூ மார்க்கெட் தெப்பக்குளம் மைதானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஆவாரம்பாளையம், சித்தாபுதுார் ரோட்டை சேர்ந்த ராஜ்படேல்,20 என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அவர் வைத்திருந்த பைக்கை சோதனையிட்ட போது, விற்பனைக்காக ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. ராஜ்படேலை கைது செய்து ஜே.எம்:1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement