கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
நமது நிருபர்
நாகை மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள கும்பல், அதை மீட்பதற்கான அரசு நடவடிக்கையை எதிர்த்து தவறான பிரசாரத்தை செய்து வருகிறது. இதை முறியடித்து நிலத்தை மீட்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில், நாயன்மார்களால் பாடப்பெற்றது. ஏழு திருமுறைகளிலும் போற்றி பாடப்பட்டுள்ள ஒரே கோவில் இதுதான்.
தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 88 கல்வெட்டுகள் இந்த கோவிலில் உள்ளன.
இந்த கல்வெட்டுகள் சோழ மன்னர்களான ஆதித்ய சோழன், முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தை சேர்ந்தவை.
இந்த கல்வெட்டுகளில் கோவில்களுக்கு ஏராளமான மானியங்கள் வழங்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அவ்வாறு மன்னர்களாலும், அவர்களுக்குப் பின் வந்த கொடை வள்ளல்களாலும் வழங்கப்பட்ட ஏராளமான நிலங்கள் இன்று ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளை அறநிலையத்துறை இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதற்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடும் விதமாக, சமூக வலைத்தளங்களில் ஒரு சில நபர்கள் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
அறநிலையத்துறை நடவடிக்கையால் ஆக்கிரமிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதுவும் ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிடாமல், ஏதோ அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது போல பிரசாரம் செய்கின்றனர். இத்தகைய கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்று ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி ஆர் ரமேஷ் அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது: ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கும் கோயில் விரோத கும்பல், நிலத்தை மீட்க முயற்சிக்கும் அறநிலையத்துறை நடவடிக்கைக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது. ஜெஹபர் ஷெரிப் என்ற நபர், ஏதோ 120 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அறநிலையத்துறை அநியாயமாகப் பிடுங்குவது போல் பொய்யாகச் சித்திரத்துள்ளார்.
இந்த 120 குடும்பங்களும் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களைப் பல ஆண்டுகாலமாக வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்து பக்கா மாடி வீடுகள் கட்டி வைத்துள்ளனர்.
இந்த கும்பல், ஹிந்து கோவில்களையும், ஹிந்து மதத்தையும் மதிக்காத ஒரு கும்பல்.
அவர்கள் வெளியிட்ட சித்தரிப்பு படத்தில் ஒரே ஒரு இஸ்லாமியப் பெண் இருப்பதாகப் போட்டு, மற்றவர்கள் எல்லாம் பெரும்பான்மை ஹிந்துக்கள் போல் காட்டியுள்ளார். உண்மை இதற்கு நேர் மாறாக உள்ளது.
இந்த கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களில் எவ்வளவு இஸ்லாமியர்கள் இருக்கின்றனர் என்று யோக்கியனாக இருந்தால் ஷெரிப் சொல்லட்டுமே. "பல ஆண்டுகளாக வசித்து வரும்" என்பதற்கு பதிலாக "பல ஆண்டுகளாக கோவில் சொத்தை ஆக்கிரமித்து பக்கா மாடி வீடுகள் கட்டி வசித்து வரும்" என்று யோக்கியனாக இருந்தால் அந்த நபர் போட்டிருப்பார்.
விலை கொடுத்து முறையாகப் பெற்ற சொத்தின் உரிமை சாதாரண உரிமையாக அரசியல் சட்டம் 300-A ஷரத்தின் கீழ் வரும். ஒரு கோயிலின், மசூதியின், சர்ச்சின் சொத்துரிமை அரசியல் சட்டம் ஷரத்து 26ன் கீழ் அந்த மத நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை ஆகும்.
வெகு நாட்கள் கழித்து, சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற அறநிலையத்துறை இப்போதுதான் நடவடிக்கை எடுக்கிறது. அதை, "மக்கள் கேட்கும் கேள்விகள்" "மக்களின் நியாயமான கோரிக்கைகள்" எனப் போலியாக இவர் சித்தரிக்கிறார்.
இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வடமறைக்காடு கோவிலையே வேதாரண்யத்தில் ஆக்கிரமித்துள்ளனர் என்பதையும் மறைத்துப் பேசுகிறார்.
மாற்று இடம் தர வேண்டும் என்று கேட்பதிலேயே இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதைப் பச்சையாக ஒத்துக் கொண்டுள்ளார். தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு இவர்களைக் கோயில் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர் சமூகத்தைச் சேர்ந்த பலரைத் திரட்டி வெளியேற்று நடவடிக்கைகளை முடக்க முயல்வதாகச் செய்தி வருகிறது.
சட்டப்படி அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை, சட்ட விரோதமாக எதிர்ப்பவர்களைச் சிறையில் தள்ள வேண்டும். இவ்வாறு ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவில் நில ஆக்ரமிப்பாளனுக்கு கருணை காட்ட வேண்டாம். எந்த சாதிக்காரனாக இருந்தாலும் சரி. பதில் இடமும் கொடுக்க வேண்டாம்.
இவர்கள் முஸ்லீம்கள் இல்லை, பக்கா தீவிரவாதிகள். இவர்கள் சொத்தை ஜப்தி செய்ய வேண்டும்.
Ramesh the tireless lone gladiator of temple causes may god give him enough strength to carry on the noble work.
தமிழகத்தில் உள்ள அரசுக் கோவில்களின் நிலத்தில் ஒருகாலத்தில் அதன் ஊழியர்கள் குடி இருந்தார்கள். அவர்கள் எந்தவிதமான பலனையும் சம்பளத்தையும் எதிர்பாராமல் இறைபணி ஆற்றினார்கள். இன்று அவர்களின் வாரிசுகள் யாரும் அவ்வாறு கோவில்களில் பணியாற்றுவதில்லை. ஆனால் கடந்த தலைமுறையில் கிடைத்த கோவில் இடத்தை அப்படியே ஆட்டைய போட்டுக் கொண்டு, கடை கண்ணி கட்டியும், மாட்டுதொழுவம் கட்டியும், வாடகைக்கு விட்டுக் கொண்டு, எந்த வாடகையையும் கோவிலுக்குக் கொடுக்காமல் தாங்களே வைத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு கோவிலுக்கும் சுமார் பத்து ஏக்கர் நிலம் உள்ளது. எந்த வருமானமும் தருவது இல்லை. கோவிலுக்கு காணிக்கையும் கிடையாது. விளக்கு ஏற்ற எண்ணை, கற்பூரம், ஊதுபத்தி என்று எதுவம் கொடுப்பது கிடையாது. ஆனால் நிலத்தை மட்டும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்டியல் வருமானத்தை கோவில் அலுவலகத்தில் உள்ளவர்கள் ஆட்டைய போடுகிறார்கள். தர்மகர்த்தாக்கள் நியமனம் வேஸ்ட். ஆனால் இறைவனுக்கு படையல், துணி, நகை, நைவேத்தியம், அபிஷேகம், உற்சவங்கள் செய்வது பொதுவான பக்தர்கள். மாலை மரியாதை வாங்குவது அரசு அதிகாரிகளும், அறங்காவலர் என்று கூறிக் கொள்பவர்களும். ஒரு சிறிய கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ள கோவில். ஆனால் அந்த இடத்தை கொடுங்கள் என்று கிராமத்தினர் கேட்கின்றனர். ஆனால் அரசு அதை தர மறுக்கிறது. சுற்றி இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றனர். கோவிலை நிர்வாகம் செய்வது அந்த கிராமத்தினர் தான். ஏஓ வருவது கூட கிடையாது. இது தான் இன்றைய கிராமத்துக் கோவில்களின் நிலைமை.
கோவில் நில ஆக்கிரமிப்பை திராவிட கட்சிகள் மறைமுகமாக ஆதரித்து இருக்கும்.? விஜய் ஆட்சியில் கட்டாயம் ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்ற வேண்டும். வேறு இடம் தரவேண்டிய அவசியம் இல்லை. முதலில் எங்கு இருந்து வந்தார்கள். அந்த இடத்தில் குடியேற வேண்டும். ஒருவன் பல லட்சம் ரூபாய் கொடுத்து கிரயம் செய்து நிலம் வாங்க, ஆக்கிரமிப்பு குழு பக்குவமான இடத்தில் இலவசமாக குடியிருக்க கூடாது. புல்டோசர் கொண்டு அகற்ற வேண்டும்.
இவர்கள் தீவிரவாதிகளை விட கொடியவர்கள். இவர்களை சித்ரவதை செய்து அணு அணுவாக கொல்ல வேண்டும்
இங்கிலாந்து நிலைமை நமக்கு ஒரு பாடம் . ஹிந்துக்களே , உணருங்கள் .
good
ஆக்ரமித்தவன் குடும்பம் முழுவதும் அழியும் . சிவன் சொத்தை அபகரித்தவன் நிச்சயம் சாவார்கள். இது சத்தியம்மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து