அண்ணியை தாக்கியவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கொத்தர் தெருவை சேர்ந்தவர் அமுதன் 43. இவரது தம்பி சதீஷ் 38, தனது குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்தார். இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால் அமுதன் மனைவி களஞ்சியராணி 40, ஈரோட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஈரோட்டில் இருந்து ராமநாதபுரம் வந்த போது கணவரின் சகோதரி கயல்விழி 48, உடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த சதீஷ் களஞ்சியராணியை கம்பியால் தாக்கினார். இதில் காயமடைந்த களஞ்சியராணி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரம் பஜார் போலீசார் சதீஷை கைது செய்தனர்.

*பைக் மோதி விபத்து

திருவாடானை: திருவாடானையை சேர்ந்த 17 வயது சிறுவன் திருவாடானை--தொண்டி ரோட்டில் வேகமாக சென்றுள்ளார். திருவெற்றியூர் ஆர்ச் அருகே சென்ற போது ஸ்கூட்டி மீது மோதியது. இதில் கடம்பகுடியை சேர்ந்த சம்பத் 59, காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.



ராமநாதபுரம்: பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி 60. கிழக்கு கடற்கரை சந்திப்பில் உள்ள மீன் சந்தை அருகே நேற்று முன்தினம் சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற டூவீலர் மகேஸ்வரி மீது மோதியது. கேணிக்கரை போலீசார் விபத்து ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனர்.---

Advertisement