கோவை சிறையில் திடீர் சோதனை
கோவை: மத்திய சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று அதிகாலை போலீசார் மற்றும் சிறைத்துறையினர் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை தலைமையில், 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள்., 150 ஆயுதப்படை போலீசார், 200 போலீசார் மற்றும் மோப்பநாய் படையினர் உட்பட, 380 பேர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதிகாலையில் சிறை வளாகம் முழுவதும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. கைதிகள் தங்கும் அறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள், செல்போன்கள், போதைப்பொருட்கள் உள்ளனவா என சோதனை நடத்தினர்.
கோவை மத்திய சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் இந்த சோதனை நடந்தது.
சிறையில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்யவும், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து களையவும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும்.நேற்று நடந்த சோதனையில் பொருட்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்