'குவாரிகளில் விரைவில் ஆய்வு'

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சிகளில், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுதுறை அமைச்சர் விக்னேஷ் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு, புதிதாக மதுபான கடை, 'பார்'களுக்கு அனுமதி வழங்கவில்லை. காலி மதுபாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்திற்கான இயந்திரம் தற்போது சோதனை முறையில் உள்ளது. விவசாயிகள் 'கள்' இறக்குவது குறித்த கோரிக்கை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி முடிவை முதல்வர் எடுப்பார். கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்குவாரியில் ஆய்வு மேற்கொள்ள கனிமவளத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். கூடிய விரைவில் ஆய்வு நடத்தி, விதிமீறலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement