பிரமாண்ட சிவலிங்க வடிவத்தில் யோகா
புதுக்கோட்டை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, 173 மாணவர்கள் இணைந்து, பிரமாண்ட சிவலிங்க வடிவத்தை உருவாக்கி, சாதனை படைத்தனர்.
புதுக்கோட்டையில் உள்ள வைரம்ஸ் என்ற தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கடினமான கர்ணபிடாசனத்தை, 173 மாணவர்கள் ஒன்றிணைந்து, 5 நிமிடங்களுக்கு முழுமையாக செய்து காட்டினர்.
அதன்பின், தங்கள் அசாத்திய உடலமைப்பின் வாயிலாக, ஒரு பிரமாண்ட சிவலிங்கத்தை தத்ரூபமாக வடிவமைத்தனர். மாணவர்களின் இந்த அரிய முயற்சியை நேரில் ஆய்வு செய்த 'இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அலுவலக தேர்வாளர் மஞ்சுநாத், சாதனை சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.
இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உட்பட, பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
Advertisement
Advertisement