குட்கா விற்ற 5 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சேதராப்பட்டு, மயிலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், கடையில் சோதனை நடத்தி, குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, குட்கா விற்ற விழுப்புரம், ஆகாசம்பட்டை சேர்ந்த பச்சையப்பன், 55, என்பவரை போலீசார் கைது செய்தனர். குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், மூலக்குளம் பெரம்பை ரோடு, பாரீஸ் நகர் சந்திப்பில் குட்கா விற்ற மூலகுளம் ஜோசப் பாலு, 47, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர். அதேபோல், வெங்கட்டாநகர் 4 வது தெருவில் குட்கா விற்ற வெங்கட்டா நகர் நாராயணசாமி, 45; கிருஷ்ணமூர்த்தி மற்றும் 45 அடி சாலையில் குட்கா விற்ற வெங்கட்டாநகரை சேர்ந்த பரஸ்மல், 54, ஆகியோரை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு