சட்டபை தேர்தல் செலவு கணக்கு விபரம் சமர்ப்பிப்பு 

தேனி, ஜூன் 10-சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகபட்சமாக போடி தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ரூ.35.63 லட்சம் செலவு செய்துள்ளார்.சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரவு செலவு விபரங்களை தேர்தல் செலவீன பார்வையாளர்கள் முன்னிலையில் ஒப்படைத்துள்ளனர். ஆண்டிபட்டி தி.மு.க., வேட்பாளர் மகாராஜன் ரூ.23 லட்சம், அ.தி.மு.க., லோகிராஜன் ரூ.23.12 லட்சம், த.வெ.க., பாண்டி ரூ.11.07 லட்சம், நா.த.க., கோமதி ரூ.3.43 லட்சம் செலவு செய்துள்ளனர்.பெரியகுளம் தொகுதி வி.சி.வேட்பாளர் சக்திவேல் ரூ.30.03 லட்சம், அ.ம.மு.க., கதிர்காமு ரூ.19.98 லட்சம், த.வெ.க., சபரி ஐங்கரன் ரூ.12.63 லட்சம், நா.த.க., விமலா ரூ. 3.28 லட்சம் செலவு செய்துள்ளனர்.போடி தி.மு.க.,வேட்பாளர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ரூ.35.63 லட்சம், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி ரூ.20.95 லட்சம், த.வெ.க., பிரகாஷ் ரூ.14.33 லட்சம், நா.த.க., கலையரசு ரூ.6.77 லட்சம் செலவு செய்துள்ளனர்.கம்பம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஜக்கையன் ரூ.13.44 லட்சம், தி.மு.க., ராமகிருஷ்ணன் ரூ. 21.88 லட்சம், த.வெ.க., ஜெகநாத்மிஸ்ரா ரூ.28.29 லட்சம், நா.த.க., அன்புசெல்வி ரூ. 3.78 லட்சம் செலவு செய்துள்ளனர்.

 

Advertisement