சில மணி நேர இடைவெளியில் கியூபா - ஈரானில் நிலநடுக்கம்
ஹவானா: சில மணி நேர இடைவெளியில் உலகின் இருவேறு பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஆனால், இரு நிகழ்வுகளிலும் உயிர் சேதமோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கரீபியன் கடல் தீவு நாடான கியூபாவின் வடமேற்கு கடற்கரையில் ஜூன்8 இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. கியூபாவின் மாண்டுவாவிற்கு வடமேற்கே 104 கி.மீ., தொலைவில், 26 கி.மீ., ஆழத்தில் இது ஏற்பட்டதாக கியூபா பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்தது.
இந்நிலநடுக்கம் கியூபா முழுதும் உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கரீபியன் கடல் பரப்பு முழுதும் பரவி, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1880ம் ஆண்டிற்கு பின், கியூபா சந்தித்த வலுவான நிலநடுக்கம் இதுவாகும்.
இதற்கு சில மணி நேரங்களுக்குள், 12 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள மேற்காசிய நாடான ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹார்மோஸ்கன் மாகாணத்தின் சர்காஸ் அருகே, நேற்று அதிகாலையில், 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 22 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக ஈரானிய நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
-
அமைச்சர்களின் மொபைல் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்! புதிய எண் வாங்க நடவடிக்கை
-
முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
-
முன்னறிவிப்பின்றி ராஜவாய்க்காலில் நீர் நிறுத்தம்: விவசாயிகள் அதிருப்தி
-
ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி சுகாதார பெண் தன்னார்வலர்கள் மனு