முதல்வர் விஜய் பிறந்த நாள் அறுசுவை உணவு வழங்கல்

நாமக்கல்; நாமக்கல் முதல்வர் விஜய் பிறந்த நாளை-யொட்டி, நாமக்கல் பொன்விழா நகர் அரசு பள்-ளியில், மாணர்களுக்கு மதிய உணவு வழங்கப்-பட்டது.


தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, நாமக்கல்-திருச்சி ரோடு, பொன் விழா நகர் அரசு நடுநிலைப்பள்ளியில், படிக்கும் மாணவ, மாண-வியருக்கு மதிய உணவு வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, காந்தி (எ) பெரியண்ணன் தலைமை வகித்தார். த.வெ.க., மேற்கு மாவட்ட செயலாளர் சதீஸ், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிய-ருக்கு இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்-கியதுடன், முதல்வர் விஜய் படத்தை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் தில்லைமோகன், பொருளாளர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல், முத்துக்காப்பட்-டியில் உள்ள காவல் தெய்வமான மாசி பெரிய-சாமி கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்-தது. ஏராளமான த.வெ.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement