தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் முப்பெரும் விழா கொண்டாட்டம்
குமாரபாளையம்; தமிழக முதல்வர் விஜயின், 52வது பிறந்தநாள், நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, தமி-ழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆசியுடன், குமாரபாளையம் பகுதியில், 25, 26வது வார்டில், த.வெ.க., கட்சி அலுவலகம் திறப்பு விழா, 52 கிலோ கேக் வெட்டி, மாணவ, மாண-வியர், 500 பேருக்கு டிபன் பாக்ஸ், இலவச நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபக-ரணங்கள் வழங்குதல், பொதுமக்கள், 1,500 பேருக்கு அன்னதானம் வழங்குதல் என, முப்-பெரும் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலர்கள் சக்திவேல், ஆறுமுகம், சோமு ஆகியோர் பங்கேற்று கட்சி அலுவலகம் திறந்து வைத்தனர். மாணவ, மாணவியர், த.வெ.க., கட்சியினர் ஆரவாரத்-துடன், 52 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. வார்டு செயலர்கள் சபரீசன், ஹரிராம் பங்கேற்று, 500 மாணவ, மாணவியர்க-ளுக்கு டிபன் பாக்ஸ், இலவச நோட்டு
கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகர-ணங்களை வழங்கினர். பொதுமக்கள், 1,500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை