சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை: நட்புக்காக அமைக்கிறது இஸ்ரேல்
மும்பை: இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான கலாசார மற்றும் நட்பு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிரமாண்ட சிலையை நிறுவ அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
மராட்டியப் பேரரசைத் தோற்றுவித்த மாவீரர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் முடிசூடிய தினமான ஜூன் 6 ஆண்டுதோறும் சிவ ராஜ்யாபிஷேக தினம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் யானிவ் ரேவாச், இஸ்ரேலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்டமான சிலை நிறுவப்படும் என்ற தகவலை வெளியிட்டார்.
இச்சிலையை சிவாஜி மகாராஜின் வரலாற்றுப் பெருமைக்கு நிகராக வடிவமைக்க, தேவையான வரலாற்றுத் தரவுகள் மற்றும் கலை ஆலோசனைகளை வழங்குமாறு மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிசிடம் இஸ்ரேல் தூதரகம் உதவி கோரியுள்ளது.
இதற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவித்துள்ள முதல்வர் பட்னவிஸ், 'இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிக்கு மஹாராஷ்டிர அரசு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும்' என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் சிலை நிறுவும் திட்டம் குறித்து நம் நாட்டிற்கான இஸ்ரேல் தூதர் யானிவ் ரேவாச் கூறியதாவது:
எங்கள் தூதரகம் சார்பில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை இஸ்ரேலில் நிறுவ முடிவு செய்துள்ளோம். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான நெருங்கிய உறவின் வலுவான அடையாளமாக இருக்கும். சத்ரபதி சிவாஜியின் வாரிசுகள் பலர் இன்றும் இஸ்ரேலிய சமூகத்திற்குப் பெருமளவில் பங்களித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில்... காத்திருப்பு! முழு உடல் பரிசோதனைக்கு 3 மாதங்களாகிறது; பிற இடங்களிலும் வசதிகளை ஏற்படுத்துமா அரசு?
-
ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே தர வேண்டும்: பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவு
-
பரிதவித்த வடமாநில குடும்பம்; வழிகாட்டிய சிங்கப்பெண் படை
-
இதே நாளில் அன்று
-
அரசியலுக்கு முழுக்கு?
-
'செலவு பண்ண வழியில்லையோ?'