கேரளாவில் திருடிய மினி லாரி கோவையில் மீட்பு
பாலக்காடு: பாலக்காடு நகரில் திருடப்பட்ட மினிலாரி, கோவையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
கேரள மாநிலம், பாலக்காடு மேற்கு யாக்கரை, விஸ்வேஸ்வரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன்குட்டி. இவர் தனது வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றார். அப்போது, மர்மநபர்கள் மினிலாரியை திருடி சென்றனர்.
லாரி மாயமானதால் அதிர்ச்சி அடைந்தவர், பாலக்காடு டவுன் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் வாகன சோதனை துவங்கியது. வாகனத்தில் இருந்த ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் உதவியோடு போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது, வாகனம் வாளையார் எல்லையை கடந்து கோவை பகுதிக்குள் நுழைந்து, ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. கோவை பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை மீட்டு, தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்
-
பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவு; நேருவின் சாதனையை இன்று முறியடித்த பிரதமர் மோடி
-
வாங்க கற்றுக்கொள்வோம்; தீ பாதுகாப்பு முகாம்
-
ஆசிரியர்கள், பெற்றோரிடம் ஆசி பெற்ற மாணவர்கள்
-
யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ் கண்டிப்பு
-
அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சுக்களை அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்த வேண்டும் கரூர் எம்.பி., ஜோதிமணி காட்டம்
-
வைக்கோல் கட்டுக்குள் கஞ்சா பதுக்கல் தம்பதியர் உட்பட 3 பேர் கைது