பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் நிறைவு; நேருவின் சாதனையை இன்று முறியடித்த பிரதமர் மோடி
நமது சிறப்பு நிருபர்
2014ம் ஆண்டு மே 26ம் தேதி நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அது முதல் தற்போது வரை அவர் பிரதமராக பொறுப்பில் உள்ளார். 2025ம் ஆண்டு ஜூலை 25ம் தேதியன்று, முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை மோடி முறியடித்தார்.
பிரதமராக இந்திரா, 1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி முதல் 1977ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி வரை 4077 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார். நாட்டின் முதல் பிரதமரான நேரு, 1952ம் ஆண்டு மே 13ம் தேதி முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பணியாற்றினார்.
இந்நிலையில் இன்று நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடிக்கும் நிலையில் மாலை டில்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட கூட்டம் நடைபெற உள்ளது. தேஜ கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பிற முக்கிய மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் மோடி தனது 12 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
@block_G@
நீண்ட கால பிரதமர் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். மூன்று முறை மக்களாட்சி ஆணையைப் பெற்று, 140 கோடி மக்களின் நம்பிக்கையின் மூலம் 4,399 நாட்கள் தலைமை தாங்கியுள்ளார்.
25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது முதல் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக மாற்றியது வரை, பிரதமர் மோடியின் பதவிக்காலம் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
block_G
@block_Y@
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த பிரதமர் மோடிக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டிய பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தியாவின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் உலக அரங்கில் அதன் நிலையை மேம்படுத்துவதில் அவர் பல ஆண்டுகளாக ஆற்றிய அர்ப்பணிப்புள்ள பொதுச் சேவை மற்றும் தலைமைத்துவத்திற்கு இந்தச் சாதனை ஒரு சான்றாக விளங்குகிறது.
மலேசியா, இந்தியாவுடனான தனது நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பை மதிக்கிறது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும், நமது மக்களுக்கு இடையே உறவை வலுப்படுத்த மேலும் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடி தொடர்ந்து வெற்றி பெறவும், இந்திய மக்கள் தொடர்ந்து அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புடன் வாழவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.block_Y
@block_B@
இது குறித்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பாரதத்தின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்தவர் என்னும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரலாற்றுச் சாதனை என்பது வெறும் பதவிக்காலத்தின் நீளத்தைக் குறிப்பது மட்டுமல்ல; மாறாக, நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மாற்றத்திற்கான யுகத்தைப் பிரதிபலிப்பதாகும்.
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், பிரதமர் மோடியின் தலைமை கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தின் ஊற்றாகவும், வழிகாட்டும் சக்தியாகவும் திகழ்கிறது.
மனிதகுல மேன்மைக்காக உழைக்கும் மகத்தான தலைவர்களை வரலாறு என்றும் மறப்பதில்லை.
அவர்கள் வரலாற்றில் யுகபுருஷர்களாக நிலைபெறுகிறார்கள். தனது தொலைநோக்குத் தலைமையாலும், அர்ப்பணிப்பு மிக்க அயராத உழைப்பாலும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டி,பிரதமர் மோடி தற்கால பாரதத்தின் 'யுக புருஷராக' திகழ்கிறார். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.block_B
we are blessed to have modi as our prime minister...we expect the same growth from him for another 3 terms...Thank you modiji.
1 காஷ்மீர் 370 35ஏ ஒழிப்பு சட்டங்கள்
2 ட்ரிபிள் தலாக் ஒழிப்பு சட்டம்
3 யுனிபோர்ம் சிவில் கோட் சட்டம் மாநிலங்களில்
4 பாகிஸ்தானிய தீவிரவாதம் ஒழிப்பு, ஆபரேஷன் சிந்தூர்
5 பாகிஸ்தானிய அணு ஆயுத கிடங்குகளில் மீது தாக்குதல்
6 இந்திய பொருளாதாரம் உலகத்தில் 11 ல் இருந்து 4 வது
7 பல மாநில வரிகளை ஒழித்து ஒரே GST சட்டம்
8 2 லஷமாக இருந்த வருமான வரி விலக்கு 12 லக்ஷம் இப்போது
9 ராணுவ பலத்தில் முதல் 5 நாடுகளில் பாரதம் ஒரு நாடு
10 பாதிக்கப்பட்ட வெளி நாட்டு இந்தியர்களை இலவச விமானம் மூலம் மீட்பு
11 ராணுவ அணு ஆயுதங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
12 எல்லையில் வெளி அமைப்பு, பங்களாதேஷிகளை வெளியேற்றுவது
13 பொது மற்றும் தனியார் நிலம் கொள்ளை போவதை தடுக்க வக்ப் சட்டம்.
14 ராணுவ ஆயுதங்கள் ஏற்றுமதி உயர்வு.
15 ஊழல் இல்லாத 12 வருட மத்திய அரசு
16 மொபைல் போன் உற்பத்தியில் இந்திய முதலிடம்
17 பல ஆயிரம் கோடி சூரிய, காற்று, ஹைட்ரஜன் மின் திட்டங்கள்
18 வடகிழக்கு மாநிலங்களில் மிக சிறந்த சாலைகள், கட்டமைப்புகள்
19 2014ல் 74 ஆக இருந்த விமான நிலையங்கள் 165 ஆக உயர்வு
20 2014ல் வெளிநாட்டு பண இருப்பு 300 கோடி டாலர்கள் இப்போது 700 கோடி டாலர்கள்
21 ரயில்வே முதலீடுகள் 2014ல் 20000 கோடி ரூபாய் இப்போது 2.78 லக்ஷம் கோடி ரூபாய்
இப்படி பல. அவரை, அவரது கட்சியை நீங்கள் வெறுக்கலாம். ஆனால் அவர் செய்த சாதனைகளை மறுக்க முடியுமா?
மூன்று முறை முதலமைச்சர், மூன்றாவது முறை பிரதமர். எந்த கொம்பனாலும் சாதிக்க முடியாத ஒன்று. 27 வருடங்களில் மோடியை எதிர்த்தவன்தான் அழிந்து போயிருக்கிறான்.
"கமெண்ட் செக்ஷனைப் பார்த்தாலே தெரிகிறது மோடி அவர்களின் மீதான மக்களின் இருவேறு பார்வைகள். நேருவின் காலத்து சிஸ்டத்தையும், இன்றைய நவீன கால டிஜிட்டல் சிஸ்டத்தையும் ஒப்பிட்டு வாசகர் நடராஜன் ராமநாதன் எழுதியிருப்பது மிகச் சரியான கவனிப்பு. ஆதரவோ, எதிர்ப்போ... இந்திய அரசியலில் மோடி ஒரு தவிர்க்க முடியாத சகாப்தமாக மாறிவிட்டார் என்பதுதான் இன்றைய அக்மார்க் எதார்த்தம்"
"நீண்ட நாட்கள் பதவியில் இருந்தார் என்பது ஒரு வரலாற்றுப் பதிவுதான், மறுப்பதற்கில்லை. ஆனால், வாசகர் சவுந்தரராஜன் சொல்வது போல இந்த நீண்ட கால ஆட்சியில் சாதாரண ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு போன்ற எதார்த்தமான விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாதனை என்பது நாட்களைக் கணக்கிடுவதில் மட்டும் இல்லை, சாமானியனின் வாழ்வாதார உயர்வில் தான் இருக்கிறது"
கலியாணம் செய்யவே இளைஞர்கள் யோசிக்கிறார்கள் ..ஒரு குழந்தையை பெற்று வளர்த்து ஆளாக்குவது மிகப்பெரிய சவால் ... வேலை வாய்ப்புகள் குறையுமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை... எதார்த்தமான விஷயம்னா என்ன ?
ஒரு சாமானியனுக்கு அன்றாட வருமானமும், வேலை பாதுகாப்பும் தான் முக்கியம். நாடே கொண்டாடும் ஒரு சாதனையாக இது இருந்தாலும், அடிமட்ட நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயராத வரை இந்த நாட்களின் எண்ணிக்கையால் சாமானியனுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதே கள எதார்த்தம்"
"இந்திய அரசியல் வரலாற்றில் இது சாதாரண சாதனை அல்ல நேரு மற்றும் இந்திரா காந்தியின் சாதனைகளை முறியடித்து, ஊழல் கறையே இல்லாமல் தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் இத்தனை நாட்கள் பதவியில் நீடிப்பது மோடி அவர்களின் அசாத்திய உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அக்மார்க் சான்று. உலக நாடுகளே வியந்து வாழ்த்தும் அளவிற்கு இந்தியாவை மாற்றிய பெருமை இவரைச் சேரும். வாழ்த்துகள் மோடி ஜி"
Mr. Modi can not be compared to Nehru and Indira Gandhi. Both of them expired untimely while in office.
இதுக்கும் நேருதான் காரணம் புரியுதா?
நேரு அப்பாவி இந்தியர்களை. சுதந்திர போராட்ட கதைகளை சொல்லியே 20 வருஷம் ஓட்டிட்டார். அப்போது சோசியல் மீடியா கிடையாது. இருந்தாலும் பெரும்பான்மை மக்களை செய்திகள் சென்று அடையாது. ஆகவே நேருதான் காரணம் புரியுதா?
45 கோடி மக்கள் ஆட்டுமந்தைகளாக இருந்தபோது நேரு பதவியில் இருந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை. இப்போது 145 கோடி மக்கள் அதுவும் சமூக ஊடகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மகத்தான பங்களிப்பை செய்து அனைத்து தகவல்களும் அனைவரும் உடனே அறிந்துகொள்ளும் நிலையில் இந்த சாதனை புரிந்தது மிகவும் அசாத்தியமானதுதான். மோடிஜி ஒரு அதிசய பிறவிதான். சந்தேகமே இல்லை.
சில விமர்சனங்கள் இருந்தாலும் வியக்கத்தக்க சாதனைதான்... வாழ்க... வளர்க...மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் நில ஆக்கிரமிப்பு கும்பல் அரசுக்கு எதிராக பிரசாரம் : முறியடித்து நிலத்தை மீட்க பக்தர்கள் வலியுறுத்தல்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
-
மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்
-
'குவாரிகளில் விரைவில் ஆய்வு'