ஆசிரியர்கள், பெற்றோரிடம் ஆசி பெற்ற மாணவர்கள்
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா மகா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், 6-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு நடந்த,'வித்யா பிரவேஷ்' நிகழ்ச்சியில் துணை முதல்வர் ரேணுகா வரவேற்றார். பிரேமா இறை வாழ்த்து பாடினார். மாணவி சண்ட்ரியா வரவேற்பு நடனமா டினார். பள்ளி தாளாளர் மனோஜ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் கல்வியுடன் ஒழுக்கம், பணிவு, இறை வழிபாடு போன்றவற்றை கற்று கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் தங்கள் தாய் நாட்டின் மீது அன்பு கொண்ட, சிறந்த குடிமகன்களாக உருவாக முடியும்,'' என்றார்.
தொடர்ந்து, சுவாமி ஓம்காரனந்தா, பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் ஆசி வழங்கி பேசுகையில், ''மனிதர்களை, மனிதனாக மதித்து தங்கள் வாழ்வில் உயர மாணவர்கள் முன் வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, ஆசிரியர்கள், பெற்றோர் மாணவர்களுக்கு ஆசி வழங்கினர். ஆசிரியர் பாக்கியலீலா நன்றி கூறினார்.
மேலும்
-
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
-
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பாஜ அரசு முக்கியத்துவம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு முதல்வர் விஜய் பயணம்
-
புகழ் பெற்ற துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணா காலமானார்
-
குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134.84 கோடி ஒதுக்கீடு; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு; 2 நாட்களாக சரிந்த நிலையில் விர்ர்!