யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ் கண்டிப்பு

திண்டுக்கல்: யார் தவறு செய்தாலும் ஏன் நானே தவறு செய்தாலும் தவறு தவறுதான் '' என, அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் விக்னேஷ் தலைமையில் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

கலெக்டர் துர்கா, எம்.பி., க்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி, நிலக்கோட்டை த.வெ.க., எம்.எல்.ஏ., அய்யனார், எஸ்.பி., பிரதீப் முன்னிலை வகித்தனர். 173 பயனாளிகளுக்கு லத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் அமைச்சர் விக்னேஷ் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலும், மாநகரிலும் பல பகுதிகளில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கிறது. நாம் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாமா என யோசித்து பணியாற்றுங்கள். யாரு தவறு செய்தாலும் ஏன் நானே தவறு செய்தாலும் தவறு தவறுதான். எந்த அதிகாரிகளையும் த.வெ.க.,வினர் சுய தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடாது. அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும், மக்களின் தேவைகள் குறித்து கூறினால் அதற்கு முக்கியத்துவம் வழங்கி செய்து முடிக்க வேண்டும். திண்டுக்கல் மாநகரில் கனரக வாகனங்கள் பகல் நேரத்தில் வரக்கூடாது என விதிமுறை இருக்கு. ஆனால் எந்நேரமும் வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். யார் வாகனம் என்றாலும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நகருக்குள் வரக்கூடாது. கனிம வளங்கள் முழுமையான பாதுகாக்கப்பட வேண்டும்.

பின்தங்கிய திண்டுக்கல் பகுதியை முன்னேற்ற வேண்டும். ஒருங்கிணைந்த மாஸ் கிளினிங் நடத்த வேண்டும். துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள உள்ளாட்சி பகுதியில் கூடுதலாக பணியாளர்கள் தேவைப்பட்டால் கலெக்டரிடம் தெரிவித்தால் உடனடியாக நியமிக்கப்படுவர். பழநி மலையை சுற்றிய டாஸ்மாக் கடைகள், கோயில், சர்ச், பள்ளிவாசல்கள், பள்ளிகள் 100 மீட்டருக்குள் மதுக்கடைகள், பெட்டி கடைகள் வைக்கக்கூடாது என்றார்.

Advertisement