வாங்க கற்றுக்கொள்வோம்; தீ பாதுகாப்பு முகாம்

குன்னுார்: குன்னுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற இரண்டு நாள் சிறப்பு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

முகாமிற்கு தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் குமார் தலைமை வகித்தார். முன்னணி தீயணைப்பாளர் பாண்டியராஜன், அவசர காலங்களில் பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பேசினார்.

முகாமில், தீயின் வகைகள் மற்றும் தீயணைப்பான்களை பயன்படுத்தும் முறைகள், எல்.பி.ஜி. சிலிண்டர் பாதுகாப்பு, வாகன தீ விபத்து தடுப்பு, மின்சார பாதுகாப்பு மற்றும் பட்டாசு கையாளும் முறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு, செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Advertisement