சந்தைக்கடை ரோட்டில் வழிந்தோடும் சாக்கடை நீர்
பொங்கலுார்: கொடுவாய் பகுதியில் கழிவு நீர் வெளியேற, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. கழிவு நீரை ஓரிடத்திற்கு கொண்டு சென்று பூமியில் இறங்கும் வகையில் சமுதாய உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்காதது, சமுதாய உறிஞ்சு குழியில் குப்பைகளை கொட்டியது போன்ற காரணங்களால் கழிவுநீர் பூமியில் இறங்குவதில்லை.
இதனால், கழிவு நீர் மொத்தமாக ரோட்டில் வழிந்தோடுகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கொடுவாயில் சந்தை கூடுகிறது. சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடும் துர்நாற்றம் வீசுகிறது. வியாபாரிகள் கழிவு நீர் செல்லும் வழித்தடத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். பொது மக்கள் கழிவு நீரின் மீதே நடந்து செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
அப்பகுதியினர் கூறுகையில், ‘அரசு சந்தைக்கு சுங்கம் வசூலிக்கிறது. சுங்கம் வசூலிப்பது ஒரு ஊராட்சி கழிவுநீரை விடுவது மற்றொரு ஊராட்சி. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, கழிவு நீர் கால்வாயை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; கழிவு நீரை ரோட்டில் விடக்கூடாது. ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
மேலும்
-
சொல்கிறார்கள் ––––––––– கிராமத்து அசைவ விருந்து சாப்பிட வாங்க!
-
சொல்கிறார்கள் -------––––––––– எங்கள் சமூகம் முன்னேற வேண்டி உழைக்கிறேன்!
-
அசாம் மாநிலத்தில் விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது
-
6 நாட்கள் வெளிநாட்டு பயணம்; ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டார் மோடி
-
பனையூரில் தொடர்கிறது இணைப்பு விழா; இன்று விஜயதாரணி உள்ளிட்டோர் ஐக்கியம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,880 அதிகரிப்பு