பிரான்சில் ஜி 7 உச்சி மாநாடு; பிரதமர் மோடி பங்கேற்கிறார்

10


புதுடில்லி:பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்கிறார். ஜூன் 16-17 தேதிகளில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேறகிறார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஜூன் 13, 14 தேதிகளில் பிரான்சின் நைஸ் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார். பின்னர் ஜூன் 16-19 தேதிகளில் ஈசியான், பாரிஸ் மற்றும் ஜூன் 14-15 தேதிகளில் ஸ்லோவாக்கியாவுக்கும் அதிகாரப்பூர்வமாகவும் பிரதமர் மோடி செல்கிறார்.

பிரான்சின் நைஸ் நகரில் அந்நாட்டு அதிபர் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இரு நாடுகள் இடையே வர்த்தக உறவுகள், சர்வதேச அரங்கில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.

பின்னர் இருவரும் இணைந்து பாரத் இன்னோவேட்ஸ் ( Bharat Innovates) என்ற நிகழ்வை தொடங்கி வைக்கின்றனர். இந் நிகழ்வு இந்தியா, பிரான்சிஸ் உள்ள முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைக்கும் ஒரு முயற்சியாகும்.

தொடர்ந்து ஜுன் 14 முதல் 16 வரை ஸ்லோக்கியாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இதன்மூலம் ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெறற பின்னர் அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

வர்த்தகம், முதலீடு, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமரின் பயணம் அமையும்.

அரசு முறை பயணத்தின் முக்கிய கட்டமாக பிரான்சில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

சர்வதேச நாடுகள் இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது, ஏஐ தொழில்நுட்பம், நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் உச்சி மாநாட்டில் நடக்க இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் பிரதமர் மோடியுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

Advertisement