அப்போ அணில்; இப்போ 'பியூஸ் கேரியர்'; மின் தடை குறித்து பழனிசாமி கிண்டல்
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்கால தேவைக்கேற்ப உற்பத்தி, கொள்முதல், உட்கட்டமைப்பு திட்டமிடல் இல்லை. தமிழக மின் தேவை, 2026 - 27ம் ஆண்டில், 23,013 மெகாவாட் வரை செல்லும் என்று, மத்திய மின்சார ஆணையம் கணித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மின் தேவை அதிகரிப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், முன்கூட்டியே திட்டமிடல் நடக்கவில்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரை, இரவில் மின் தடையால், குழந்தைகள் துாங்க முடியவில்லை. தொழிற்சாலை, விவசாய பம்ப் செட் மோட்டார்கள் இயங்க முடியவில்லை.
ஆனால், அமைச்சரோ, 'பியூஸ் கேரியர் திருட்டு' என்று விளக்கம் அளிக்கிறார். தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில், பியூஸ் கேரியர் திருட்டு போனாதா? கடந்த தி.மு.க., ஆட்சியின் நீட்சியாகவே, இந்த பொய்க்கால் குதிரை அரசு இருக்கிறது.
கடந்த ஆட்சியில், 'மின் தடைக்கு அணில்கள் காரணம்' என்றனர். தற்போதைய அணில் குஞ்சுகள் ஆட்சியில், 'பியூஸ் கேரியர் திருட்டு' என காரணம் சொல்லப்படுகிறது. இதுபோன்ற சால்ஜாப்பு பேச்சுகளை பேசாமல்; காரணத்தை தேடி நேரத்தை வீணாக்காமல், தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவா இரு அடுத்து உனக்கு தான்... கோடநாடு எஸ்டேட் விசாரணை ஆரம்பிக்க போகுது
கனவில் கூட வாய்ப்பில்லை ராசா :
கருணாநிதியோட திமுக முடிவு, ஜெயலலிதாவோட அதிமுக முடிவு.. தமிழகத்தில் புதிய வரவு விஜயின் தவெக மற்றும் வேறு ஒரு புதிய கட்சி வேண்டும். மக்கள் சிந்தித்து திமுக, அதிமுக மட்டுமல்ல மற்ற துண்டு போட்டுள்ள அனைத்து திராவிட மற்றும் ஒட்டுண்ணி கட்சிகளும் ஒழிய வேண்டும்.
மின்சார ஒப்பந்தங்கள் தனியார் துறையிடம் ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு பைசா கட்டிங் என்ற முறையில் திராவிட மாடெல் கட்சிகளால் அறிமுகம் செய்யப்பட்டது. 200 யூனிட் பிரீ, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்ற அரசியல் காரணங்களால் மின்வாரியங்கள் கோடைகாலத்தில் மின்சாரம் வாங்க பணம் இல்லை.
இதனால் மின்சார துறையே கடனில் ஓடுகிறது. இது தவிர ஆளும் அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மின்சார திருட்டு. இது 70 ஆண்டு திராவிட கட்சிகளின் லக்ஷணம். ஒருத்தனுக்கு ஒருத்தன் குற்றம் சொல்லி ஊழலில் கொழுத்த கூட்டம் தான் அதிகம். மக்கள் படிக்க படிக்க இந்த ஊழல் கட்சிகள் கட்டம் கட்டப்படும்.
ஓ உங்களுக்கு எல்லாம் அவ்வளவு நக்கலா போயிட்டுருக்கா அப்போ அணிலு எங்கிருந்து வந்தது அன்னா தி மு காக்கவில் இருந்து வந்ததுதானே அணிலு அதுக்கப்புறம் இப்ப பியூஸ் கேரியர் இல்ல, பியூஷ் கோயலா சொல்லுங்கள் பழனிச்சாமி.
இவருக்கு ஒரு நாடு எப்படி இருக்கணும் என்று தெரியுமா ..?..இவர் ஆட்சியில் இவரில் கீழ் பொதுப்பணி துறை வைத்து இருந்தார். ஒரு சி.எம் பொதுப்பணி வைத்து இருந்த உலகில் இவராகத்தான் இருக்கும். இது எதற்கு ,,கொள்ளை அடிக்க. அரசாட்சி என்ன என்று இவருக்கு தெரியுமா..?. இவரின் செயல்கள் எல்லாம் பணம் பண்ணுவதில் இருந்தது. சான்றோர்க்கு அழகு தர்மம், நீதி , நேர்மையுடன் ஆட்சி செய்வது. கொடைவள்ளல் எம்ஜியாரின் இப்படி கட்சி அழிவதை தொண்டர்கள் எப்படி பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .?. தொண்டர்கள் தான் அதிமுகவை காப்பாற்றணும். தொண்டர்கள் விழிப்பு பேரனும்.
2021 முதல் 2026 வரை உங்கள் அறிக்கைகளைப் பார்த்து போரடித்து விட்டது இபிஎஸ் அவர்களே. உடனடியாக கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்து மற்றவர்களுக்கு வழி விடுங்கள்
உங்களது திருட்டு திராவிடத்தின் 60 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை குட்டிசுவராக்கி வைத்து விட்டீர்கள். முதலில் அதிலிருந்து மீள்வதே பெரும்பாடு. இன்றைக்கு நீ கேள்வி கேட்கும் மின்வெட்டிற்கு காரணம் கடந்த கால உங்கள் ஆட்சிதான் என்பது தெரியாதது போல் நடிக்கிறீர்கள். கேள்வி கேட்பதற்கு அருகத்தையே உங்களுக்கு இல்லை. எதோ இப்படி மக்கள் மீது அக்கறையில் இருப்பதுபோல் கேள்வி கேட்டு விஜயின் அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நீங்க நினைக்கிறீர்கள். அது நடக்காது. நீங்கள் செயற்கை மின்வெட்டை ஈடுபடுத்துவதை எல்லாம் மக்கள் அறிந்துதான் இருக்கிறார்கள். இனி உங்களுக்கு இப்போ இருக்கிறது கூட கிடைக்காது.
இது அமைச்சரின் திறமையின்மையின் வெளிப்பாடே.முன்பு தமிழக இணைப்பு தனியாக இருந்தது.எடப்பாடி ஆட்சியில் அது தேசிய இணைப்புடன் சேர்ர்க்கபட்டது.எனவே கோடையில் இருக்கும் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே கோரிக்கை வைத்திருந்தால் மின்சாரம் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.இவர்கள் விஜய் புகழ் பாடவும் ரீல்ஸ் போடவும் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் செயலிலும் பிஸி.மின்சாரம் எங்கிருந்து வரும்.
திரு வில்லிபுத்தூரான் அவர்களே, கடந்த ஒரு மாதமாக நிலவும் மின்தடையானது, அதிக அளவு பயன்பாட்டை தாங்க முடியாமல் ஏற்படும் பழுது காரணமாக நிகழும் மின்தடை. இத்தருணத்தில் மின்பற்றாக்குறை இல்லை.
பற்றாக்குறையினால் ஏற்பட்ட மின்தடை, 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நிலவியது. இது எல் நினோ ஆண்டு. வட தமிழக மாவட்டங்களில் வெப்பம் அதிகமாய் உள்ளது, இரவு நேரங்களிலும் நீடிக்கிறது, வீடுகளில் குளிர் சாதன ஏர் கண்டிஷனர் உபயோகம் அதிகமாக உள்ளது. இந்த அதிகரித்துள்ள மின்சுமையை தாங்கும் அளவிற்கு, மின் பகிர்மான கருவிகள், ட்ரான்ஸ்பாரமர், கேபிள் ஆகியவை பலப்படுத்த வேண்டும்.
இது ஒரு மாதத்திற்குள் செய்ய முடியாது.
அப்போது நீங்க ஒரு வேஸ்ட் இப்போது நீங்க படு வேஸ்ட்மேலும்
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
-
அதிக மழைப்பொழிவு எங்கே?