போதைப்பொருள் விழிப்புணர்வு

புதுச்சேரி: காட்டேரிகுப்பம் காவல் நிலையம் சார்பில், காட்டேரிகுப்பம் காலனி பகுதியில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.

சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், சமூக விளைவுகள் மற்றும் சட்டரீதியான தண்டனைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கவும், போதைப்பொருள் விற்பனை அல்லது பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement