பைக்கில் மணல் கடத்தியவர் கைது

காட்டுமன்னார்கோவில்: கொள்ளிடம் ஆற்றில் பைக்கில் மணல் கடத்திய ஷண்டன் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  

காட்டுமன்னார்கோவில் அடுத்த ஷண்டன் கிராமத்தைச் சேர்ந்த ஜான்கென்னடி மகன் கனகராஜ், 33; கூலித்தொழிலாளி. இவர் தொடர்ந்து கஞ்சங்கொல்லை கொள்ளிடம் ஆற்றில் பைக் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சேத்தியாத்தோப்பு கிரைம் டீம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் கஞ்சங்கொல்லை கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபுட்ட கனகராஜ்யை மணல் மூட்டையுடன் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவனிடம் இருந்த நெம்பர் பிளேட் இல்லாத பைக்கை பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் போலீசில் ஒப்படைத்தனர். 

இது குறித்து எஸ்.ஐ., அப்சல் சையத் வழக்குப் பதிந்து கனகராஜை கைது செய்தனர்.

Advertisement