நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் மீது வழக்கு

சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர், 43. சுண்டகிரி கிராமத்திலுள்ள தேக்கலப்பள்ளி சாலையில், நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த, 7ம் தேதி இரவு, 8:40 மணிக்கு, நிறுவனத்தின் காவலாளி குபேந்திரன், நிறுவனத்தின் முன் குவித்து வைத்திருந்த கழிவுகளுக்கு தீ வைத்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த சிலர், கழிவுகளுக்கு ஏன் இப்பகுதியில் தீ வைக்கிறீர்கள் எனக்கேட்டு வாக்குவாதம் செய்தனர்.மேலும், காவலாளி குபேந்திரனை திட்டியதுடன், நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, முன்பக்க கதவை உடைக்க முயன்றனர். இது தொடர்பாக, தனசேகர் கொடுத்த புகார் படி, சுண்டகிரியை சேர்ந்த ஜெகதீஷ், மூர்த்தி, வேணு, சிவாஜி ஆகிய, 4 பேர் மீது, சூளகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement