கஞ்சா விற்ற வடமாநில தொழிலாளிக்கு காப்பு

இடைப்பாடி; இடைப்பாடியில், செங்கல் சூளையில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்து வந்த, வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.


இடைப்பாடி, நாச்சிபாளையம் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருபவர் பழனிசாமி. இவரது சூளையில் மேற்கு மாவட்டம், கொல்கத்தா, பர்னாஸ் பகுதியை சேர்ந்த ரகுமான் முல்லா மகன் இம்ரான் முல்லா, 35, வேலை செய்து வருகிறார். இம்ரான் முல்லா, கடந்த ஏப்ரலில் நடந்த மேற்கு வங்காள தேர்-தலில் ஓட்டு போட குடும்பத்துடன் சென்று விட்டு, 15 நாட்களுக்கு முன்பு செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கஞ்சா விற்பதாக வந்த தகவலை-யடுத்து, இடைப்பாடி போலீசார், நேற்று செங்கல் சூளைக்கு சென்றனர். அங்கு கஞ்சா விற்பனை செய்து வந்த இம்ரான் முல்லாவை கைது செய்து, அவரிடம் இருந்து, 300 கிராம் கஞ்சா, சிறிய அள-விலான எடைமிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,'வடமாநில தொழிலாளி, மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு தற்போது வந்துள்ளார். அங்கிருந்து, ஒரு கிலோ கஞ்சாவை, 2,000 ரூபாய்க்கு வாங்கி வந்து இங்கு, 50 கிராம் கஞ்-சாவை, 500 ரூபாய்க்கு விற்று வந்தார். அப்பகுதி மக்கள் தகவலின் பேரில் வடமாநில தொழிலா-ளியை கைது செய்தோம்,' என்றனர்.

Advertisement