மனைவிக்கு கத்திக்குத்து கணவனுக்கு ஓராண்டு சிறை

சேலம்; மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு, ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, சேலம் நீதி-மன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சேலம், ஆண்டிப்பட்டி ஹவுசிங் போர்டு பகு-தியை சேர்ந்தவர் ஜானகிராமன், 52, கூலி தொழி-லாளி. இவரது மனைவி புஷ்பா, 48, இவர்க-ளுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2022 ஜன., 13ல், ஏற்பட்ட தகராறில் ஆத்தி-ரமடைந்த ஜானகிராமன், கத்தியால் மனைவியை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த புஷ்பா, அரசு மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து செவ்-வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜானகிராமனை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜானகிராமனுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து நீதிபதி ஜெய்குமார் தீர்ப்பளித்தார்.

Advertisement