மூதாட்டியிடம் அத்துமீறியவர் கைது

அயனாவரம்: அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி, புழுக்கம் காரணமாக, வீட்டு கதவை திறந்து வைத்து, தன் கணவருடன் துாங்கி கொண்டிருந்தார்.

அதே பகுதியில் வாடகைக்கு தங்கியுள்ள உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த யோகேஷ், 33, என்பவர், நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்து, மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் சத்தமிடடே அங்கிருந்து யோகேஷ் தப்பினார். தகவலறிந்து வந்த அயனாவரம் போலீசார், யோகேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement