நீட் தேர்வை சுமூகமாக நடத்த வேண்டும்: அமைச்சரவை செயலர் அறிவுரை

புதுடில்லி: நீட் மறு தேர்வை சுமூகமாகவும், வெளிப்படையாக நடத்த வேண்டும் என மத்திய அமைச்சரவை செயலர் அறிவுறுத்தி உள்ளார்.


நீட் மறு தேர்வு வரும் 21ம் தேதி நாடு முழுதும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சரவை செயலர் சோமநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நீட் மறுதேர்வை, சுமூகமாகவும், வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டியது முக்கியம். சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.


நீட் தேர்வை சுமூகமாக நடத்த மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மறு தேர்வை நடத்துவதற்கும் அதன் ஒருமைப்பாட்டிற்கும் இடையூறுசெய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சோமநாதன் கூறினார்.

Advertisement