சுயநலத்திற்காக இல்லாமல் மக்கள் தேவைகளை அறிந்து திட்டங்கள்; அமைச்சர் ரமேஷ் உறுதி


திருச்சி: சுயநலத்திற்காக இல்லாமல், பொதுநல நோக்கோடு மட்டுமே, மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.

திருச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடந்த அனைத்துத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தவிர, மற்றவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டி:

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் எவ்வித ஊழலோ, சுரண்டலோ இன்றி, தடையின்றி நேரடியாக மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே, இந்த ஆய்வு கூட்டத்தின் நோக்கம். சுயநலத்திற்காக இல்லாமல், பொதுநல நோக்கோடு மட்டுமே, மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மக்களின் கோரிக்கைகளுக்கும், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்னைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும், அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.ஐந்தாண்டுகளில் திருச்சி, தமிழகத்தின் மிகச்சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement