தங்கம் விலை சவரனுக்கு ரூ.2400 அதிகரிப்பு; 2 நாட்களாக சரிந்த நிலையில் விர்ர்!
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று (ஜூன் 12) சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 10) ஆபரண தங்கம் கிராம் 13,800 ரூபாய்க்கும், சவரன் 1,10,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூன் 11) தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து, 13,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் சரிவடைந்து, 1,08,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று முன்தினம், தங்கம் விலை சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்தது. கடந்த இரு தினங்களில் மட்டும், சவரனுக்கு 5,600 ரூபாய் சரிவடைந்துள்ளது.
இன்றைய நிலவரம்
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று (ஜூன் 12) சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் அதிகரிப்பு
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த ஆபரணத்தங்கம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இது பெயர்தான் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று வாருங்கள்
குறையும் போதே தெரியும் கூட போகிறது என்று அது என்று நிரூபணம் ஆகிவிட்டது