குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.134.84 கோடி ஒதுக்கீடு; முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் டெல்டா மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.134 கோடி குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் சராசரியாக 52.72 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும், கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நெற்பயிரே முதன்மையாக சாகுபடி செய்யப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 20.65 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், குறுவைப் பருவத்தில் மட்டும் சராசரியாக 5.14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில், ஆண்டுக்கு 32.07 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026ம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன.
குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 இலட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயன் அடைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (6)
Tamil Inban - Singapore,இந்தியா
12 ஜூன்,2026 - 13:40 Report Abuse
கரண்ட் வச்சு என்ன செய்ய, பூமியில் தண்ணீர் இருக்கனும், ஏற்கனவே நீர்மட்டம் 200அடிக்கும் கீழ் போய்விட்டது. குடிதண்ணீருக்கே பிரச்சனையாக இருக்கிறது 0
0
Reply
Sun - ,
12 ஜூன்,2026 - 12:20 Report Abuse
மொத்தத்தில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறப்பு இல்லை. வலிமையாக மோதியோ அல்லது உரிய ராஜதந்திர வழிமுறைகளின் படி பேசியோ தண்ணீர் வாங்கவும் இன்றைய தமிழக அரசுக்கு திறமை இல்லை.அ.தி.மு.க அரசு இருக்கும் போது மட்டும் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாவிட்டால் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் கம்யூனிஸ்டுகள் இன்றைக்கு வாயில் பிளாஸ்திரி ஒட்டி மௌன விரதத்தில் இருக்கின்றனர். மொத்தத்தில் இந்த அரசு சொன்னபடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியும் செய்யவில்லை. மேட்டூரில் தண்ணீர் திறப்பும் இல்லை. இதைச் சுட்டிக் காட்டினால் நாங்கள் புதுசு டைம் வேண்டும் என்பார்கள். 0
0
Anand - chennai,இந்தியா
12 ஜூன்,2026 - 13:30Report Abuse
இப்பவும் அவிங்க போராடுவாங்க, எப்படின்னா.... கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் தராததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் நடத்த கிளம்புவார்கள். 0
0
Reply
shanmukchand - ,
12 ஜூன்,2026 - 12:11 Report Abuse
what about the general public .They need to face power cuts 0
0
Reply
Govi - ,
12 ஜூன்,2026 - 10:53 Report Abuse
காசிதத்தில் மட்டும்
நடைமுறையில்
இல்ல 0
0
krish - ,
12 ஜூன்,2026 - 12:36Report Abuse
கோவி கோவிச்சுகாதிங்க...பொறுமை..பொறுமை....ஒரு நல்லது.நடக்கட்டுமே 0
0
Reply
மேலும்
-
பெண் பள்ளியில் அமைச்சர் ஆய்வு
-
முதியவர் மாயம் போலீஸ் விசாரணை
-
கலெக்டர் அலுவலக வளாக குளம் சீரமைக்கும் பணி துவங்கியது
-
நிர்வாகிகள் தேர்வு
-
அரசு மருத்துவமனையில் ஆய்வகத்தில் தினமும் காத்திருக்கும் நோயாளிகள்
-
அழைப்பு கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு மருத்துவமனை,சுகாதார நிலையங்ளில் ஏற்பாடு
Advertisement
Advertisement