தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா...
நமது சிறப்பு நிருபர்
தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்.... அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அவரது வாழ்க்கை பயணத்தை இங்கு காணலாம்...
சினிமா பயணம்
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941ம் ஆண்டு ஜூலை 17ல் பிறந்தவர் பாரதிராஜா. இவரது நிஜயப்பெயர் சின்னச்சாமி. இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரான அல்லி நகரத்திலேயே முடித்த பாரதிராஜா படிக்கும் காலத்திலேயே இலக்கியங்கள், நாடகம் எழுதுதல், நடிப்பு, இயக்கம் என்று ஆர்வமாக இருந்தார்.
"ஊர் சிரிக்கிறது", "சும்மா ஒரு கதை" போன்ற நாடகங்களை எழுதி அதை மேடைகளிலும் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக தனது முதல் பணியை ஆரம்பித்த பாரதிராஜாவுக்கு சினிமா மீதிருந்த தீரா காதலால் சென்னைக்கு வந்தார். சென்னையிலும் மேடை நாடகம், பெட்ரோல் பங்க் வேலை என்று பணியில் இருந்தபடியே சினிமா துறையில் நுழையும் முயற்சியில் முனைப்புடன் இருந்தார்.
16 வயதினிலே...
இயக்குநர் பி புல்லையாவிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின் பிரபல கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து சினிமாவின் நுணக்கங்களை கற்றார். நீண்ட பயணத்திற்கு பின் "16 வயதினிலே" படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு வரை ஸ்டூடியோக்களில் அடைபட்டு கிடந்த தமிழ் சினிமா, தமிழக கிராமங்களையே தனது ஸ்டூடியோக்களாக மாற்றியது பாரதிராஜாவின வருகைக்கு பின் என்றால் அது மிகையல்ல.
ஒரு கிராமவாசியின் உணர்வுகளையும் கிராமத்தின் சூழலையும் அப்பழுக்கற்று செல்லுலாய்டில் அழகாகவும் அற்புதமாகவும் காட்டினார். முதல் படத்திலேயே தன்னுடைய ஆளுமையை நிரூபித்த பாரதிராஜா தனது அடுத்த படைப்பான 'கிழக்கே போகும் ரயிலையும்' முழுக்க முழுக்க கிராமத்து பின்புலத்திலேயே எடுத்து வெற்றி கண்டார். கிராமத்து கதைகளத்தை கொண்ட படங்களை மட்டுமே இவரால் இயக்க முடியும் என்ற விமர்சனங்களுக்கும் அன்று இவர் தப்பவில்லை. தனது அடுத்த படைப்பான 'சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் மூலம் அப்படிபட்ட விமர்சனங்களுக்கும் முற்றுபுள்ளி வைத்தார்.
இயக்கிய படங்கள்
டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை உள்ளிட்ட படங்களை இயக்கினார். தமிழ் படங்களையும், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய ஹிந்திப் படங்களையும் இயக்கி உள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர்
கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், இதயம், தந்துவிட்டேன் என்னை, காதல் வைரஸ், ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படை வீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தவிர மனோஜ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தாஜ்மஹால் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
குடும்ப பின்னணி
பாரதிராஜா தனது சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். மனோஜ் பல படங்களில் நடித்தார். கடந்தாண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது காதல் மனைவி நடிகை நந்தனா ஆவார். ஜனனி, மலேசியாவை சேர்ந்த ராஜகுமார் தம்பிராஜாவை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
பயோடேட்டா
நிஜப்பெயர் : சின்னசாமி
பிறந்த தேதி : 17-ஜுலை-1941
பிறந்த ஊர் : அல்லி நகரம், தேனி மாவட்டம்
பெற்றோர் : பெரிய மாயத்தேவர் - கருத்தம்மா,
மனைவி : சந்திர லீலாவதி
பிள்ளைகள் : மனோஜ் (மகன்) - ஜனனி (மகள்)
விருதுகள்
பத்மஸ்ரீ
2004ல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு
தேசிய விருதுகள்
1. 1982ல் "சீதாகொகா சிலுகா" என்ற தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருது.
2. 1986ல் ‛முதல் மரியாதை' படத்திற்காக தேசிய விருது
3. 1988ல் "வேதம் புதிது" தேசிய விருது
4. 1995ல் 'கருத்தம்மா' படத்திற்காக தேசிய விருது
5. 1996 ல் "அந்திமந்தாரை' திரைப்படத்திற்காக தேசிய விருது
6. 2001ல் "கடல் பூக்கள்" படத்திற்காக தேசிய விருது
தமிழக அரசு விருதுகள்
16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, ஈர நிலம் போன்ற படத்திற்காக தமிழக அரசின் விருது வாங்கி உள்ளார்.
தவிர பிலிம் பேர் விருதுகள், ஆந்திர மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார்.
பாரதிராஜா இயக்கிய முக்கிய படங்கள்
01. 16 வயதினிலே
02. கிழக்கே போகும் ரயில்
03. சிகப்பு ரோஜாக்கள்
04. புதிய வார்ப்புகள்
05. நிறம் மாறாத பூக்கள்
06. நிழல்கள்
07. அலைகள் ஓய்வதில்லை
08. டிக் டிக் டிக்
09. காதல் ஓவியம்
10. வாலிபமே வா வா
11. மண்வாசனை
12. புதுமைப்பெண்
13. ஒரு கைதியின் டைரி
14. முதல் மரியாதை
15. கடலோரக் கவிதைகள்
16. வேதம் புதிது
17. கொடி பறக்குது
18. என் உயிர் தோழன்
19. புது நெல்லு புது நாத்து
20. நாடோடி தென்றல்
21. கேப்டன் மகள்
22. கிழக்கு சீமையிலே
23. கருத்தம்மா
24. பசும்பொன்
25. தமிழ் செல்வன்
26. அந்திமந்தாரை
27. தாஜ்மஹால்
28. கடல் பூக்கள்
29. ஈர நிலம்
30. கண்களால் கைது செய்
31. பொம்மலாட்டம்
32. அன்னக்கொடி
பாரதிராஜா இயக்கிய பிறமொழி படங்கள்
01. கொத ஜீவிதலு (தெலுங்கு)
02. ரெட் ரோஸ் (ஹிந்தி)
03. சீதாகொகா சிலுகா (தெலுங்கு)
04. லவர்ஸ் (ஹிந்தி)
05. யுவதரம் பிலிசிண்டி (தெலுங்கு)
06. சவேரே வாலி காடி (ஹிந்தி)
07. ஆராதனா (தெலுங்கு)
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
மொழி மாற்ற படங்களுக்கு விருது தருவதில்லை என்று பல தமிழ் படங்களுக்கும் கலைஞர்களுக்கும் மறுக்க பட்ட தேசிய விருது அலைகள் ஓய்வதில்லை படத்தின் தெலுங்கு பதிப்பு சீதகோக சிலகாவிற்கு மட்டும் எப்படி கிடைத்தது?
திரையுலகையே திரும்பிப்பார்க்காத சிலர் . முதல்வரான பின்பு எம் ஜி ஆர் , ஜெயலலிதா , இப்போது விஜய்
மேல் சாதியின் பார்வையில் ராஜ தர்பாரில், உலவிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை.... கைப்பிடித்து அழைத்து வந்து குக்கிராம மண்சாலையில் நடக்க வைத்தவர்...? சினிமாவில் பிளாஸ்டிக் பூக்களையே பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்கு... கிராமத்தின் கள்ளிக்காட்டில் தானாய் வளர்ந்த சப்பாத்திக்கள்ளி பூவையே அழகாக காட்டியர்... ஆழ்ந்த இரங்கல்கள்...?
திரு பாரதிராஜா அவர்களுக்கு என்னுடைய முதல் மரியாதை.
கற்பனை வளம் மிகுந்தவர்.. தமிழ் சினிமாவை வேறு கோணத்தில் காண்பித்து மற்றவர்களை திரும்பி பார்க்க வைத்தவர்.. அவரது ஆத்மா சாந்தி அடைவதாக
தமிழ்ச்சினிமாவை எத்தனைபேர்கள்தான் புரட்டிப்போட்டார்கள்?
One of the best directors in Indian cinema. Ohm Shanthi
கன்னிப்பருவத்திலே படத்தை விட்டுட்டீங்க!
அது பாக்யராஜ் பாலகுரு இருவரும் இணைந்து இயக்கம்.
நமது சிறுவயது முதல், தன்னுடைய அருமையான படங்கள் எனும் அமரத்துவம் படைத்த காவியங்கள் மூலம், நம்மையெல்லாம் மகிழ்வித்தவர் இன்று நம்மிடமிருந்து பிரிந்துவிட்டார், என்னும்பொழுது மனம் வலிக்கிறது.. கண்கள் பனிக்கின்றன.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
ஓம் ஷாந்தி
RIPமேலும்
-
ஜல்லிகள் சிதறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
கோவிந்த சாலை பகுதியில் சிறப்பு துப்புரவு பணி
-
நீர் நிலைகளை துார்வார கலெக்டரிடம் மனு
-
உப்பனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க.... மெகா திட்டம்:ரூ.200 கோடியில் விரிவான திட்டம் தயாராகிறது
-
எந்த 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் இடம் கிடைக்கும்? வரும் 13ல் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் பதில்!
-
மது விற்பனையை தனியார்மயமாக்க பேச்சு துவக்கம்