நீர் நிலைகளை துார்வார கலெக்டரிடம் மனு

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி உள்ள நீர்நிலைகளை தனியார் தொண்டு நிறுவனங்களை கொண்டு துார்வார அனுமதி கேட்டு, கலெக்டர் குலோத்துங்கனிடம் ரவிக்குமார் எம்.எல்.ஏ., மனு அளித்தார்.

புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் பெய்யும் மழை நீர் அனைத்தும் நேரடியாக கடலில் கலந்து வீணாகி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை அரசு சார்பில் துார்வாரி மழைக் காலங்களில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால், வில்லியனுார் தொகுதியில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை சமூக பொறுப்பு திட்ட நிதியின் கீழ், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் நீர் நிலைகளை துார்வார நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என, கலெக்டர் குலோத்துங்கனிடம், ரவிக்குமார் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு அளித்தார். மனுவை பரிசீலினை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

Advertisement