ஜல்லிகள் சிதறிய சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சாலையில் சிதறியுள்ள ஜல்லிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின் றனர்.
விழுப்புரம் நான்கு முனை சிக்னலில், புதுச்சேரி, சென்னை, திருச்சி, திருக்கோவிலுார் சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பிரிந்து செல்லும் முக்கிய சந்திப்பாக உள்ளது.
இதில், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து திருச்சி நெடுஞ்சாலைக்கு திரும்பும் இடத்தில் உள்ள சாலையில் சில தினங்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டது.
இந்த பள்ளத்தை மண் மூலம் மூடிய பணியாளர்கள் அதில், ஜல்லி கற்களை கொட்டி வைத்தனர். இந்த ஜல்லி கற்கள் தற்போது வெளியேறி சாலை முழுதும் சிதறியுள்ளது.
இதில், வேகமாக ஏறி செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சாலையை விரைந்து செப்பனிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'ஒரு தலைமுறையை வாழ வைக்கும் பயிர்' எண்ணெய் பனை 15 ஹெக்டேரில் சாகுபடி
-
கரூரில் 'வீ த லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்
-
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பூக்கள் விற்பனை மந்தம்
-
அப்போ அணில்; இப்போ 'பியூஸ் கேரியர்'; மின் தடை குறித்து பழனிசாமி கிண்டல்
-
பாலப்பட்டி சாலையில் முள் செடிகள் அகற்றம்
-
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை ஜோர்