இந்தியர்களின் சுயமரியாதையை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி; அமித் ஷா புகழாரம்

4


புதுடில்லி: இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் சுயமரியாதையையும், கவுரவத்தையும் மீட்டெடுத்ததே பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


அவரது பதிவு; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நீண்ட காலம் நாட்டு மக்களுக்குச் சேவை செய்து, புதியதொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 12 ஆண்டுகால ஆட்சிப் பயணத்தில் பல்வேறு துறைகளில் மிக முக்கியமான மாற்றங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

புதிய பார்லி கட்டடம், ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டங்களுக்கு மாற்றாக, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகம், புதிய கல்விக் கொள்கை, மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர்கல்விகளில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், சுயசார்பு இந்தியா ஒவ்வொரு இந்தியனின் நோக்கமாக மாறியது, சட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில், நக்சல்கள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் கூட்டு வலிமையானது தனது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் திறன்கள் குறித்துப் பெருமை கொள்ளக் கற்றுக்கொண்டது. குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் சுயமரியாதையையும், கவுரவத்தையும் மீட்டெடுத்ததே பிரதமர் மோடியின் மிகப்பெரிய சாதனை, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement