விருதுநகரில் என்.சி.சி., கமாண்டர் ஆய்வு

விருதுநகர், ஜூன் 12 -

விருதுநகரில் உள்ள என்.சி.சி., 28வது பட்டாலியன் பிரிவில் மதுரை என்.சி.சி., தலைமையகத்தின் கமாண்டர் கர்னல் சவுகான் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது என்.சி.சி., மாணவர்களுக்கு ஆலோசனை, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், ராணுவ அதிகாரிகளாக விரும்பும் மாணவர்கள் அதற்காக இப்போதே தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும், என்றார். இதில் பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் ராகேஷ் குமார் உள்பட பலர் உடனிருந்தார்.   

Advertisement