ராமநாதபுரம் மழை செய்தியில் சேர்க்கவும்...

*முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 1:00 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் வெண்ணீர் வாய்க்கால், கீழத்துாவல், விளங்குளத்துார், மேலச்சாக்குளம், ஏனாதி, துாரி, கீரனுார், நல்லுார், வைத்தியனேந்தல் உள்பட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.

முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு போலீஸ் ஸ்டேஷன் அருகே ரோட்டில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். முதுகுளத்துார் பேரூராட்சியில் தாழ்வான தெருக்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர்.

Advertisement