விலை கிடைக்காததால் அவுரி விவசாயிகள் கவலை
கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட துாம்பக்குளம், அரசபட்டி, கொக்குளம் பகுதிகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படும் அவுரி செடி நுாற்றுக்கணக்கான ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த அவுரி செடிகள் வளர்ந்த பின்னர் அவற்றை பறித்து சுத்தம் செய்து காய வைத்து பவுடராக மாற்றுவர். அதன்பின் விருதுநகரில் உள்ள சந்தைக்கு அனுப்புவது வழக்கம்.
100 கிலோ அவரிச் செடிகளை பறித்தால் அவற்றை காய வைக்கும் போது 15 கிலோ அளவுக்கே காய்ந்த அவுரி செடி கிடைக்கும். இவை முன்பு ரூ. 50 முதல், ரூ.60 வரை விலை போயின. ஆனால் சில மாதங்களாக ரூ. 20 முதல் 25க்கு விலை போவதால் அவற்றை பயிரிடும் விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.
விவசாயக் கூலி, மருந்து, உரம் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் நிலையில், அதன் மூலப்பொருளான அவுரிச் செடிக்கு போதிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்படுவதாகவும், மாநில அரசு விவசாய பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
லஞ்சம் கேட்டதால் பறிபோனது ரூ.3.3 லட்சம் கோடி முதலீடு; திமுக ஆட்சி மீது அமைச்சர் கீர்த்தனா திடுக்!
-
திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
-
தண்ணீர் பாட்டில் கொடுத்தால் வீசி எறிவார்கள்; சட்டசபையில் சிரிப்பலை
-
சொல்கிறார்கள் –––––––––– சேர்ந்து வாழாவிட்டாலும் சிறந்த பெற்றோராக இருக்கணும்!
-
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு